சென்னை: போக்சோ வழக்குகளின் நிலை குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளும் வசதி தென் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். போக்சோ வழக்கின் நிலை பற்றி புகாரளித்தவர்கள் அறிந்துகொள்ள வாட்ஸ் ஆப் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
