பயிற்சித் தகைமை இல்லாத மற்றும் தொழில் அனுபவம் உள்ளவர்களும் இப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவாய்ப்பு இருப்பதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
வெல்டிங், கிரைண்டிங், பெயிண்டிங் போன்ற துறைகளில் திறமையானவர்கள் கொரியாவில் தொழில்களுக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காக கொரிய மொழித் தேர்ச்சித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை இலங்கையர்களுக்கு ஜப்பான் தற்போது வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
நாட்டின் தற்;போதைய நிலையில் வெளிநாடுகளுக்கு தொழில் மற்றும் இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்துள்ளது. இதில் தகைமை உள்ளவர்களுக்கு இலகுவாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது.
ஆனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதற்கு அவசியமான தகைமைகள் இல்லாத பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வியாபார மற்றும் வேலை வீசா அனுமதி மறுக்கப்படுவது பிரச்சினையாக உள்ளதாகக் கூறப்படுகிறது என்ற ஊடவியாலளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜப்பான் நாட்டிற்கான வீசாக்கள் நிரகரிக்கப்படவில்லை என்றார்.
ஜப்பான் நாட்டில் பணியாட்களுக்கு அதிக தொழில் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதில் 90வீதம் பெண்களுக்கும் 10வீதம் ஆண்களுக்குமாக 2500க்கும் அதிகமான தொழில் வாய்ப்புக்கள் இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஜப்பான் நாட்டிற்கான தூதுவர் (ர்னைநயமi ஆணைரமழளாi) மற்றும் தூதரகத்தின் உதவித் தலைவர் கட்சுகி கொடரி (முயவளரமi முழவயசi) ஆகியோருடன் இலங்கையர்களுக்கு ஜப்பானில் மேலும் பல தொழில் வாய்ப்புத் தொடர்பாகக் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றியளித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பணியகத்தின் கீழ் செயல்படும் நாவலில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு செல்லலாம். இது எட்டரை மணிக்கு தொடங்குகிறது. அதற்கு மேல் மாதந்தோறும் ஒரு தொகை கிடைக்கும்.
பயிற்சி பெற்றவர்கள், Nஏஞ சான்றிதழ் தேவையில்லை. அவர்களால் அந்த வேலையைச் செய்ய முடிந்தால், தொழில்நுட்பக் குழு மூலம் தேவையான பிற தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, அவர்கள் மிக விரைவாக கொரிய அரசாங்க வேலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அதற்கான செலவுகளை அரச வங்கிகளில் கடனாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.