தேனி: தேனி மாவட்டம் 18-ஆம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழுள்ள பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு 255 மி.க.அடி தண்ணீரினை 14.09.2022 முதல் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 4614.25 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
