அப்படியே அமித் ஷாவின் மஃப்ளர் விலை எவ்வளவுன்னு சொல்லுங்க… பாஜகவுக்கு காங்கிரஸ் நறுக் கேள்வி!

காங்கிரஸ்
முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கியுள்ள இந்த நடைபயணத்தை 150 நாட்களில் 3,500 கிலோமீட்டர் தொலைவை கடந்து ஜமமு- காஷ்மீரில் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். முதல் மூன்று நாட்கள் தமிழகத்தில் நடைபயணத்தை முடித்த ராகுல், தற்போது கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடைபயணத்தின்போது ராகுல் அணிந்திருந்த டி சர்ட்டை சில தினங்களுக்கு முன் தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பாஜக, அந்த பர்பரி டி சர்ட்டின் விலை ரூ.41,257 என்று குறிப்பிட்டிருந்தது.

இணையத்தில் வைரலான இந்த டி சர்ட் அரசியலுக்கு, ‘பாரத் ஜோடா யாத்திரையில் திரளும் கூட்டத்தை பார்த்து பயந்து வீட்டீர்களா? பிரச்னைகளை பற்றி பேசுங்கள்…வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து பேசுங்கள்… ஆடைகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி அணிந்துள்ள 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட் சூட், அவர் அணிந்துள்ள 1.5 லட்சம் மதிப்புள்ள கண்ணாடி பற்றியும் பேச வேண்டும்’ என்று காட்டமாக பதிலடி கொடுத்திருந்தது காங்கிரஸ்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவுரும், ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட், இந்த விஷயத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பபூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ காங்கிரஸ் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணத்தில் பாஜகவுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. பிரச்னைகளை பற்றி பேசாமல்ஸ டி சர்ட்டை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்

ராகுல் அணிந்துள் டி சர்ட்டின் விலை குறித்து பேசும் பாஜகவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அணிந்துள்ள 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூக்கு கண்ணாடி குறித்தும், 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மஃப்ளர் பற்றியும் பேச தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார் அசோக் கெலாட்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.