மதுரை: மதுரையில் உயர்தர குழந்தை நல மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு அமைக்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 2018 முதல் 2021 வரை உரிய சிகிச்சை இல்லாமல் 261 குழந்தைகள் இறந்துள்ளது என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
