மீண்டும் பரவும் ஃப்ளு வைரஸ் காய்ச்சல்… நிரம்பி வழியும் குழந்தைகள் வார்டுகள்!

சென்னையில் கடந்த சில தினங்களாக ஃப்ளு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால், நகர் முழுவதும் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
பீதியைக் கிளப்பிய ‘தக்காளி காய்ச்சல்’
இந்த ஆண்டுதான் கொரோனா தாக்குதலின் தீவிரம் ஓரளவு குறைந்து காணப்பட்டது. ஆனாலும், முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்டவைகளைக் கட்டாயம் பின்பற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ‘ கொரோனா இல்லாவிட்டால் என்ன… நான் இருக்கிறேன்…’ என்ற ரீதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘தக்காளி காய்ச்சல்’ பரவி மீண்டும் பீதியை ஏற்படுத்தியது. இந்த நோய் கேரளாவின் கொல்லத்தில் தொடங்கி 100-க்கும் அதிகமான குழந்தைகளைப் பாதித்தது.
கொரோனாவின் அடிப்படை அறிகுறிகளான காய்ச்சல், சோர்வு, உடல் வலி மற்றும் தோலில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகளுடன் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து தக்காளி காய்ச்சல் கட்டுக்குள் வந்தது.
குழந்தைகளைக் குறிவைக்கும் ஃப்ளு வைரஸ்
இந்த நிலையில்தான் அடுத்த அதிர்ச்சியாக மீண்டும்
* குழந்தைகளை அதிகமாக பாதிக்கக்கூடிய ஃப்ளு வைரஸ் காய்ச்சல் சென்னையில் பரவி வருவதால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
* பல பள்ளிகளில் குழந்தைகளின் ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை கணிசமான அளவில் காணப்படுவதாகவும், பள்ளிக்கு வந்திருக்கும் குழந்தைகளில் கூட பலர் தொடர்ந்து இருமிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
* அதே சமயம் இந்தக் காய்ச்சலால் பெரியவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருக்கும் என்பதால், அவர்களை இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் தொற்றுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
* மிக அதிகமான காய்ச்சல் மற்றும் இருமலுடன் வரும் குழந்தைகளால் சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
* நகர் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது 25 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
அறிகுறிகள்:
* ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை ஃப்ளு வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாகும். இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது.
என்றாலும், ப்ளு வைரஸ் பாதிக்கும் பட்சத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
* ஃப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அது சுவாச மண்டலத்தைதான் அதிகமாக தாக்கும்.
* இதனால் இருமல் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி, வயிற்று வலி போன்றவையும் ஏற்படக் கூடும்.
* ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் 2 முதல் 4 நாட்களில் குணமாகிவிடும். சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படி பரவுகிறது?
* ஃப்ளு வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவிவிடும். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது வெளிப்படும் துளிகள் மூலம் மற்றவர்களைப் பாதிக்கும்.
இந்த வகை காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
* எனவே காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் பக்கத்தில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு சென்றால் ஃப்ளு வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பரவல் ஏன்?
வைரஸ் காய்ச்சல்களில் ஃப்ளு வகை வைரஸ் காய்ச்சல் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகளவு பரவுவது உண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாலும், முகக் கவசம் அணிந்ததாலும் இத்தகைய வைரஸ்கள் தாக்கம் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் விலகி உள்ள நிலையில் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பொது மக்கள் கைவிட்டு இருப்பதால் மீண்டும் வைரஸ் காய்ச்சல்கள் தலையெடுக்கத் தொடங்கி உள்ளன. அந்த வகையில் தற்போது சென்னையில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எஸ்.பி. வேலுமணி ரெய்டும்… செவ்வாய்க்கிழமை சென்டிமென்டும்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலைமுதல் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல, அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. திருவள்ளூர் மாவட்டத்தில், வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரண்டு வருடங்களாக செயல்படுவதாகவும், இந்த மருத்துவமனையில், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கும் முரணாக சர்டிபிகேட் வழங்கியுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும் சேலத்தில் 3 இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள இடங்களில் என மொத்தம் 13 இடங்களிலும் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
செவ்வாய்க்கிழமை சென்டிமென்ட்
ஏற்கெனவே, கடந்தாண்டு ஜூலை மாதம் மற்றும் கடந்த மார்ச் மாதம் வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெற்றது. பொதுவாக வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு என்றால், சில சென்டிமென்ட்கள் தொடர்கின்றன. ரெய்டின்போது அங்குக் கூடும் அதிமுக தொண்டர்களுக்கு டீ, டிபன், ரோஸ்மில்க், ஸ்நாக்ஸ், மதிய உணவு கொடுத்துத் திணறடிப்பார்கள்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
“திமுக அமைச்சர்களைப் போல் தப்பிக்க பார்க்க மாட்டோம்!” – ரெய்டு குறித்து இபிஎஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான 39 இடங்களில் இன்றுகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரெய்டு தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார்.
அதில்…
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
பிரதமர் வேட்பாளர் – பாஜக பாணியைப் பின்பற்ற காங். திட்டமா?

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பும், அது பற்றிய விவாதங்களும் இப்போதே தொடங்கிவிட்டன. 2024-லிலும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் புதிய வியூகங்களை வகுத்து பா.ஜ.க பணியாற்றிவருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரையிலான நடைப்பயணத்தை ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உற்சாகமாக மேற்கொண்டுவருகிறது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
10 ரூபாய் நாணயம்; கொடுக்கல் வாங்கலில் சந்திக்கும் பிரச்னைகள்.. ரிசர்வ் வங்கி செய்யவேண்டியது இதுதான்!

பத்து ரூபாய் நாணயங்கள் தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளன. மற்ற மாவட்டங்களில் இந்த நாணயத்தை பலர் வாங்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் நிகழ்வாக இருக்கிறது.
இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என சேலத்தில் இருக்கும் சில வர்த்தகர்கள், பஸ் நடத்துனர்களிடம் கேட்டோம்.
அவர்கள் சொன்ன காரணங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
பெண்ணுறுப்பு சிதைப்பு… பாலியல் இன்பம் கிடைக்கப்பெறாத 13 கோடி பெண்கள்!

ஐம்பத்தி மூன்று வயதான நிலையிலும், ஏழு வயதில் தனக்கு நிகழ்ந்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உடல் பதறுகிறது மசூமா ரனல்விக்கு (Masooma Ranalvi).அன்றைக்கு, ‘வெளியே போகலாம் வா’வென பாட்டி அழைக்க, ‘ஆஹா, தனக்குப் பிடித்த சாக் லேட்டுகளை வாங்கித் தரப் போகிறார்’ என்று துள்ளிக் குதித்துச் சென்றாள் சிறுமி மசூமா.
ஒரு பழைய கட்டடத்துக்குள் அழைத்துச் சென்ற பாட்டி, அங்கு ஓர் அறையில் அவளைப் படுக்க வைத்தார். அவளைச் சுற்றித் திரையிடப்பட்டது. அறிமுகமற்ற வயதான பெண்மணி ஒருவர், சிறுமி மசூமா வின் உள்ளாடையைக் களைந்தார். பயத்தில் துள்ளிய மசூமாவின் சின்னஞ்சிறு தோள்களை அழுத்திப் பிடித்துக்கொண்டார் அவளுடைய பாட்டி. தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்று மசூமா அழ ஆரம்பிக்க, அவளுடைய கால்களை தன் கால்களால் அழுத்தியபடி…
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மகேஷ் பாபு; ராஜமௌலி கையிலெடுக்கும் ஆக்ஷன் அட்வென்சர் சினிமா!

2022ம் ஆண்டிற்கான 47வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா கனடாவில் செப்டம்பர் 8ம் தேதி தொடங்கியது. இந்த மாதம் 18ம் தேதி வரை இந்த விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமௌலி `விஷனரிஸ்’ என்ற பிரிவில் தெலுங்கு சினிமா குறித்தும் கலை, வணிகம் மற்றும் `Pushing the limits of industrialized pop cinema’ (நிறுவனமாக்கப்பட்ட வணிக சினிமாக்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லுதல்) என்ற தலைப்பிலும் கலந்துரையாடியிருந்தார்.
அப்போது தனது அடுத்த படம் தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் உருவாக இருப்பதாகவும் இப்படம் ‘ஜேம்ஸ் பாண்ட்’ அல்லது ‘இந்தியானா ஜோன்ஸ்’ படங்களைப் போன்ற ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…