இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மதி இழந்து, தகுதி இழந்து, தரம் தாழ்ந்து மத நல்லிணக்கத்திற்க்கு எதிராக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் பொருந்தும் வகையில் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களை தவிர எல்லா ஆண்மகன்களும் விபச்சாரியின் மகன் என்று பேசுகிறார். இதை கண்டித்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இவர் பேசியது எங்களை மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இது திட்டமிட்ட சதி பேச்சு. தான் எடுத்த உறுதிமொழிக்கு எதிரான போக்கை அவர் கடைபிடித்து வருகிறார்.
இது குறித்து மேலும் கரு.நாகராஜன் கூறியதாவது:
நீ இஸ்லாமியராக பிறந்தால், நல்ல தாய் பெற்ற மகன், கிறிஸ்துவாக பிறந்தால் நல்ல தாய் பெற்ற மகன், ஆனால் நீ இந்துவாக இருந்தால் விபச்சாரியின் மகன் என்று பொது மேடையில் பேசி உள்ளார். ஆன்மிகம் செழித்த இந்த பூமிக்கு, தமிழக மக்களுக்கு, கடவுளை வணங்குபவர்களுக்கு இதை விட அவமானம் எதும் இல்லை. வேதனையான ஒன்று. இது திமுகவின் சதியாக கூட இருக்கலாம். சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான சதியாக கூட இருக்கலாம்.