அமெரிக்காவின் மார்க்கெட்டிங் ஏஜென்சி நிறுவனம் ஒன்று அதன் பணியாளர்கள் வெளியேறும்போது, அவர்கள் கடுமையாக உணர்வுகள் ஏற்படாமல் இருக்க ஒரு தனித்துவமான கொள்கை ஒன்றை அறிவித்துள்ளது.
அது நோட்டீஸ் பீரியர்டில் இருக்கும் ஊழியர்களுக்கு, 10% ஊதிய உயர்வினை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரில்லாவின் நிறுவனர் ஜான் ஃபிராங்கோ கூறுகையில், கொரில்லாவை விட்டு ஒரு ஊழியர் வெளியேறுவதற்கான முடிவினை எங்களிடம் கூறினால், ஆறு வாரங்களுக்கு நோட்டீஸ் பீரியர்டை வழங்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செய்யும் தவறுகள்.. என்னென்ன செய்யக்கூடாது?

சம்பள உயர்வு
நோட்டீஸ் பீரியர்டில் உள்ள எந்த முழு நேர ஊழியருக்கு , மீதமுள்ள காலத்திற்கு 10% சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் தங்கள் முடிவினை தெரிவிக்கும் ஊழியர்கள் மூன்று மாதங்களுக்குள் வெளியேற வேண்டும் என நாங்கள் கேட்டுகொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
கொரில்லாவின் இந்த முடிவானது அவர்கள் எந்த கடினமான உணர்வுகளுடன் நிறுவனத்தினை விட்டு வெளியேற கூடாது என, அதன் நிறுவனர் பிராங்க்கோ அவரின் லிங்கிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விவாதம்
எனினும் ஊழியர்கள் வெளியேறும்போது எதற்காக இந்த ஊக்குவிப்பு? என்ற விவாதத்தினையும் தூண்டியுள்ளது.
இதற்கு நிறுவனம் தரப்பில், நிச்சயமாக ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும் ஊழியர் ஒருவர் சமீபத்தில் எங்களிடம் வெளியேற விரும்புவதாக கூறினார்.

நல்ல வாய்ப்பு
அவருடன் கைகுலுக்கி 10% சம்பளத்தினை உயர்த்தினோம். அவருக்கு இதனை விட நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் அவரின் இடத்திற்கு நாங்கள் வேறு ஒரு பணியாளரை தேடி கண்டுபிடுத்துள்ளோம். அவர்கள் இருவருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.

நாங்கள் உறுதி
இந்த திட்டம் நல்லதாக தோன்றினாலும், இதனை பயன்படுத்துவதற்கு முன்பு ஒருவர் எவ்வளவு காலம் இருக்க வேண்டும். அதாவது இந்த பலனை பெற ஊழியர்கள் எவ்வளவு காலம் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்று பயனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ஃபிராங்கோ நீங்கள் இந்த ஊதியத்தை பெறும் முன்பே நீங்கள் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதற்கான நிபந்தனைகள் இருந்தால், நான் உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ளனர்.

பலனை பெற்ற பிறகு
இந்த பலனை பெற்ற பிறகு ஊழியர்கள் மீண்டும் இருக்க முடிவு செய்தால் என்ன செய்வீர்கள், என்பதற்கு பதிலளித்த ஃபிராங்கோ, இதுவரையில் அப்படி ஏதும் நடக்கவில்லை. நாம் பாலத்தை அடையும்போது அதனை கடக்க வேண்டும். அவர்கள் வெளியேறுவதற்கான உந்துதல் இருந்ததால் திரும்பி வர முடியாது. எனினும் எதுவும் உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளார்.
US company plans to give 10% salary increase to employees on notice period
American marketing agency Gorilla has announced that it will offer a 10% pay rise to employees who are on notice period when their employees leave.