திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கவர்னர்களின் தலைவிதி என கட்டுரை ஒன்று வெளியானது. அந்தத் கட்டுரையில் தெலங்கானா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்தும் கூறப்பட்டிருந்தது.
இது மாநிலத்தில் ஆளுநர்- முதல்வர் உறவு மோசமாகியிருப்பதை காணலாம். முன்னதாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக தனது 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசினார்.
அப்போது, “75ஆவது சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை. கவர்னர் உரைக்கு எனக்கு அனுமதி இல்லை. நான் எங்கு சென்றாலும் நெறிமுறை பின்பற்றப்படுவதில்லை.
மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறைத் தலைவர்களும் நான் வரும்போது வருவதில்லை. இதைப் பற்றி நான் கவலைப்படுவது இல்லை. ஆனால் மாநிலத்தில் ஒரு பெண் கவர்னர் மிக மோசமாக நடத்தப்பட்டார் என்று வரலாறு பதிவு செய்யும்” என்றார்.
இது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மூக்கை நுழைத்ததற்கான காரணத்தை யூகிப்பது மிக எளிது. இது மாநில அரசுக்கு, கவர்னர் உட்பட்டு நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
மேலும் தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் உறவு இல்லை. பாரதிய ஜனதா கட்சி வேகமாக வளர்ந்துவிடும், அதற்கு தமிழிசை உதவுகிறார் என நினைக்கிறது. இதையே தெலங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்களும் கூறுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி. கௌசிக் ரெட்டியை எம்எல்சி ஆக்க கேசிஆர் முயன்றார். அவரது முயற்சிக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முட்டுக்கட்டை போட்டார்.
மறுபுறம் தமிழிசை சௌந்தரராஜன் பிரஜா தர்பார் நடத்தினார். அதாவது மக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று அதனை அரசுக்கு அனுப்பினார். இது மாநில அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் உறவை மேலும் மோசமாக்கியது.
தொடர்ந்து தெலங்கானாவில் உள்ள மருத்துவமனைகளில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். இதுவும் மாநில அரசுடன் மோதல் போக்கை அதிகரித்தது. இதனால் மாநில முதலமைச்சர் கே. சந்திர சேகர் ராவ், ஆளுநர் மாளிகைக்கு வருவதை தவிர்த்தார்.
அவரது அமைச்சரவை சகாக்களும் ஆளுநர் மாளிகைக்கு செல்வதை தவிர்த்தனர். தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி உஜ்ஜல் புயான் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட கேசிஆர் அதன்பின்னர் 9 மாதங்கள் கடந்த பின்னும் அங்கு செல்லவில்லை.
இதற்கிடையில் கேசிஆர் கட்சியினர், வழக்கமான கோரிக்கைகளை மறுப்பதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அவமதிப்பதாகவும், அரசாங்கத்தை புறக்கணிப்பதாகவும் பல அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆளுநர் தமிழிசை தனது பேச்சின்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கூட்டத்தில் கேசிஆர் கலந்துகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
இது கேசிஆர் மற்றும் ஆளுநர் தமிழிசை உறவு நீண்ட காலமாக படிபடியாக மோசமானதை காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil