மழை வெள்ளத்தால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட பெங்களூர் ஒரு வாரத்திற்கு இந்தியாவின் முக்கியமான விவாத பொருளாக மாறியது மட்டும் அல்லாமல் கர்நாடக அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
கொரோனா தொற்று முடிந்து ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைத்து வர போராடி வரும் நிறுவனங்களின் முயற்சிக்காக முட்டுக்கட்டையாக கடந்த ஒருவாரம் பெங்களூரில் மழை காரணமாக இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் Work From Home கொடுத்தது.
இந்த நிலையில் தற்போது பெங்களூர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செய்யும் தவறுகள்.. என்னென்ன செய்யக்கூடாது?

பெங்களூர்
பெங்களூரில் இந்த வார துவக்கம் முதலே பெரும்பாலான நிறுவனங்கள் முழுமையாக இயங்க துவங்கியது, மேலும் மழை வெள்ளம் வேகமாக குறைய துவங்கியதால் நிறுவனங்களும் விரைவாக பாதிப்புகளை சரி செய்து நிலைமையை கட்டுக்கொண்டு வந்தது.

மழை வெள்ளம்
குறிப்பாக மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, அவுட்டர் ரிங் ரோடு ஆகிய பகுதிகளில் நிலைமை விரைவாக சரியாகியுள்ளது. இதனால் அலுவலகம் செல்வோர் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு மாறி வழக்கம் போல் சாலைகளில் டிராபிக் அதிகரித்துள்ளது.

மகாதேவபுரா, அவுட்டர் ரிங் ரோடு
மகாதேவபுரா, அவுட்டர் ரிங் ரோடு பகுதிகளில் மட்டும் குறைந்தது 1000 டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் சிறிதும் பெரிதுமாக இருக்கிறது. இந்த நிலையில் மழை நீர் வேகமாக குறைந்த காரணத்தால் பெங்களூர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கர்நாடக அரசு
மேலும் கர்நாடக அரசும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்து, நகரின் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கடந்த செப்டம்பர் 7ம் தேதி முடிவு செய்தன. நாஸ்காம் உள்ளிட்ட தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஒவ்வொரு மாதமும் விர்ச்சுவல் முறையில் சந்திக்க இதுக்குறித்து ஆலோசனை செய்ய ஒப்புக்கொண்டனர்.

ஐடி நிறுவனங்கள்
இதன் மூலம் கர்நாடக அரசு மீண்டும் ஐடி நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும், இந்த மழை வெள்ளம் மூலம் பெங்களூருக்கு இனியும் சலிக்கான் வேலி ஆப் இந்தியா என்ற பட்டம் இருக்க வேண்டுமா, பெங்களூரில் இருக்கும் நிறுவனங்கள் விரைவில் நொய்டா மற்றும் குறுகிராம் பகுதிகளுக்கு செல்லும் என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.
WFH Ends after a week, Traffic peaks roads; Bengaluru back to Normal after heavy rain
WFH Ends after a week for massive rain flood, Bangalore Traffic peaks again on roads; Bengaluru back to Normal after heavy rain