மும்பை : பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனது புதிய காதலருக்கு பூங்கொத்தை காதல் பரிசாக கொடுத்து ப்ரொபோஸ் செய்துள்ளார்.
நடிகை ராக்கி சாவந்த், ஆண் நண்பருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது, அரைகுறை ஆடை, ஆபாச ஆட்டம், எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து என அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்.
இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார்.
ராக்கி சாவந்த்
நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 14 மற்றும் சமீபத்தில் முடிந்த சீசன் 15 நிகழ்ச்சியிலும் ராக்கி சாவந்த் கலந்து கொண்டுள்ளார். ஆனால், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. இவர் கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாகவும் மிகவும் பெருமையுடன் கூறியிருந்தார்.

பரபரப்பு குற்றச்சாட்டு
அதுமட்டும் இல்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரித்தேஷ்ஷை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து ரித்தேஷ் ஏற்கனவே திருமணமானதும், முதல் மனைவி இருக்கும்போதே ராக்கி சாவந்த் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு குற்றம்சாட்டினார். ரித்தேஷ் ஏற்கனவே திருமணமான செய்தியை மறைத்து இரண்டாவதாக தன்னை திருமணம் செய்து கூறி காதலர் தினத்தன்று தனது கணவரை விட்டு பிரிந்தார்.

புது காதலர்
இதையடுத்து, ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாகவும், தனது கடந்த காலத்தைப் பற்றி எதையும் மறைக்காமல் அவரிடம் கூறிவிட்டேன். ஆதிலும், அவரது குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ஆதில் கான் தனக்கு பிஎம்டபிள்யூ காரையும், துபாயில் தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். கார் மற்றும் வீட்டை விட அவரின் அன்பை தான் அதிகம் மதிக்கிறேன் என கூறியிருந்தார்.

கல்யாணம் பண்ணிப்பீயா?
இந்நிலையில், நடிகை ராக்கி சாவந்த்திற்கு காதல் தலைக்கு ஏறிப்போய், புது காதலன் ஆதிலுக்கு கையில் பூங்கொத்துடன் மண்டியிட்டு ஐ லவ் யூ ஆதில்…என்னை கல்யாணம் பண்ணிப்பீயா என கேட்க, புது காதலன் ஆதில், அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது அன்பையும் வெளிப்படுத்தி உள்ளார். இது இணையத்தில் வெளியாகி இளசுகளை சூடாக்கி உள்ளது. சரி..சரி. முரட்டு சிங்கிள்ஸ் இதைப்பார்த்து டென்ஷன் ஆகாதீங்க கூலா இருங்க.