எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை – சிக்கிய முக்கிய ஆவணங்கள்.!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 32.98 லட்சம் ரொக்க பணம், 1228 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, அமைச்சராக பணியாற்றிய 2015 முதல் 2018 வரையான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமப்புறங்களில் ஏற்கனவே இருந்த தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்த பணி வழங்கியதாகவும், அதனால் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
image
மேலும் ஊழல் முறைகேடு புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் அடிப்படையில் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையக குற்ற எண்.05/2022ல் ஊழல் சட்டப்பிரிவு 2018 இன் படி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 9 தனிநபர்கள் / நிறுவனங்கள் மற்றும் மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
image
இந்நிலையில் முறைகேடு வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை கைப்பற்ற எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்கள் என சென்னையில் 9 இடங்களிலும், கோயம்பத்தூரில் 4 இடங்களிலும், திருச்சியில் 2 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தவா 3 இடங்களிலும், ஆகமொத்தம் 31 இடங்களில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
image
மேற்படி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.