வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பத்ம விருதுகளுக்கு பெயர்களை பரிந்துரைக்கும் அரசு இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
![]() |
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுவது வழக்கம். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவிக்கு வந்த பின், இந்த விருதுக்கான பரிந்துரை நடைமுறையில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி, https://www.awards.gov.in என்ற இணையதளத்தில் ஒவ்வொரு ஆண்டும், மே 1 துவங்கி செப்., 15 வரை, விருதுக்கு தகுதியான நபர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் நடவடிக்கை துவங்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டுக்கான விண்ணப்பங்களை அளிப்பதில், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் பலரால் பெயர்களை பரிந்துரைக்க முடியவில்லை. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளையுடன் முடிவடைவதால், இந்த தேதியை நீட்டிக்கும்படி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement