பிற நாடுகளிலுள்ள புராதன சிலைகளை மீட்டுவர தனிப்படை – டிஜிபி தலைமையிலான குழு முடிவு

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள பழமை வாய்ந்த புராதன சிலைகளை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டு வர தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
புராதன சிலைகளை மீட்டுவர ஆய்வுக் கூட்டம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு கூட்டம் இன்று மாலை டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திர பாபு, அவர்கள் தலைமையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல்துறை இயக்குனர் முனைவர் கி. ஜெயந்த் முரளி, காவல்துறை தலைவர் தினகரன் மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
image
இக்கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைப்பற்றப்பட்ட கோவில் சிலைகளை அந்தந்தக் கோவில்களில் ஒப்படைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. சிலைகள் பல, கடந்த சில நாட்களில் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பதுக்கப்பட்டது, முக்கிய சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும், வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
image
அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள பழமை வாய்ந்த புராதன சிலைகளை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டு வருவது தொடர்பாகவும், முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் செய்தி குறிப்பு வெளியீடு உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.