மத்திய அரசு அதிரடி நடவடிக்கை… இனி குறைந்த விலையில் கிடைக்குமா புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள்?

அனைத்து தரப்பு மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்திவ் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை( NLEM) மத்திய அரசு அவ்வப்போது வெளியி்ட்டு வருகிறது.

இந்தப் பட்டியலில் பவ்வேறு நோய்கள் தொடர்பான மொத்தம் 350 மருந்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது கூடுதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமாக புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான Bendamustine Hydrochloride, HCl Trihydrate, Lenalidomaide, Leuprolide Acetate ஆகிய நான்கு மருந்துகளும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேபோன்று தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளும் NLEM பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.அதேசமயம் முந்தைய பட்டியலி்ல் இருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன.

தரம், முன்னுரிமை. விலை, செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில், 27 சிகிச்சைப் பிரிவுகளாக மருந்துகள் வகைப்படுத்தப்படுகின்றன.

1996 இல் முதல் முறையாக வெளியிடப்பட்ட இப்பட்டியலில் கடைசியாக கடந்த 2015 இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு தற்போது மீண்டும் சில முக்கிய மருந்துகளை சேர்த்து மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுடன் இந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் இந்த பட்டியலை வெளிியிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.