
மகேஷ்பாபுவின் 50வது வயதில் வெளியாகும் ராஜமவுலி படம்
சர்க்காரு வாரி பாட்டா படத்தை அடுத்து தற்போது திரி விக்ரம் இயக்கும் படத்தில் நேற்று முதல் நடிக்க தொடங்கி இருக்கிறார் மகேஷ் பாபு. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ராஜமவுலியுடன் முதல் முறையாக இணையப் போகிறார்.
மேலும், திரி விக்ரம் மற்றும் ராஜமவுலி படங்கள் மூலம் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த போவதாக கூறியுள்ள மகேஷ் பாபு, திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் பான் இந்தியா படம் உள்நாடு-வெளிநாடு என பல மொழிகளில் வெளியாகிறது. ராஜமவுலி இயக்கும் படத்தில் 2023 ஜூன் மாதம் முதல் நடிக்க இருக்கும் மகேஷ் பாபு தற்போது எனக்கு 47 வயது. எனக்கு 50 வயதாகும்போது அப்படம் திரைக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ராஜமவுலி படம் தனக்கு உலகளாவிய ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.