இஸ்லாமாபாத்:பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக ஆசியா பசிபிக் குழு நடத்திய ஆய்வில் பாகிஸ்தான் 11 இலக்குகளில் 10ல் மிக மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடியைக் கண்காணிக்க எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதில் நாடுகளின் செயல்பாடுகள் குறித்து இந்த அமைப்பு பட்டியலிடுகிறது. இதன் அடிப்படையில் தான் அந்த நாடுகளுக்கு சர்வதேச அமைப்புகளின நிதி உதவி கிடைக்கும்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ‘கிரே’ எனப்படும் நடவடிக்கைகள் எடுப்பதில் மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் உள்ளது. இதனால் சர்வதேச நிதி கிடைப்பது பாகிஸ்தானுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு 2018ல் 34 அம்ச இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் வரும் அக். 18 – 22ல் எப்.ஏ.டி.எப். கூட்டம் நடக்க உள்ளது. இதில் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் எப்.ஏ.டி.எப்.பின் துணை அமைப்பான ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஆசியா பசிபிக் குழு புதிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் சர்வதேச இலக்குகளில் 11ல் 10ல் பாகிஸ்தானின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில் இந்த அறிக்கை எப்.ஏ.டி.எப். எடுக்க உள்ள முடிவைக் கட்டுப்படுத்தாது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement