பெங்களூரு:
31-வது தேசிய டென்பின் பவுலிங் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் தெலுங்கானா வீரர் நவீன் சித்தம் 483-457 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான கர்நாடகாவின் ஆகாஷ் அசோக்குமாரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை சபீனா 273-261 என்ற கணக்கில் கர்நாடகாவின் ஜூடி ஆல்பனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.
Related Tags :