விஜய் நடிக்க வேண்டிய ஆக்‌ஷன் படம் ரஜினிக்கு எழுதியது… வெற்றிப் படங்களின் இயக்குநர் ஃபிளாஷ் பேக்

சென்னை: இயக்குநரும் நடிகருமான வெங்கடேஷ் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஓ மை டாக் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்சமயம் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜய்யை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ள வெங்கடேஷ் நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

ஜென்டில்மேன்

இயக்குநர்கள் பவித்ரன் மற்றும் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்துவிட்டு சரத்குமார் நடித்திருந்த மகாபிரபு என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் வெங்கடேஷ். அதன் பின்னர் விஜய் நடித்த செல்வா, நிலாவே வா, பகவதி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சூரியன் படத்தில் பவித்ரனுடைய இயக்குநர் குழுவில் இவரும் சங்கரும் இருந்துள்ளார்கள். பவித்ரனுக்கும் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கும் ஏதோ மன வருத்தம் இருந்தபோது இருவரும் பிரிந்துவிட்டனர். அப்போது படம் தயாரிக்க புது இயக்குநர்களை குஞ்சுமோன் தேடியபோது, ஜென்டில்மேன் கதையை அவரிடம் கூறுமாறு ஷங்கருக்கு வலியுறுத்தியவர் வெங்கடேஷ்தானாம்.

நடிப்பு

நடிப்பு

இயக்குநராக பல வெற்றி படங்களை கொடுத்துள்ள வெங்கடேஷ் அங்காடித் தெரு திரைப்படம் மூலம் நடிகராகவும் பிரபலமானார். அங்காடித்தெரு, கோலி சோடா, ஆண்டவன் கட்டளை, ஓ மை டாக் உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி

ரஜினி

மகா பிரபு திரைப்படத்தை எடுத்த பின்னர் தனது இரண்டாவது படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பகவதி கதையை அவருக்கென்றே பிரத்தியேகமாக எழுதியவர் ரஜினியை அணுக முயன்றும் அது நடக்காமல் போனதால், சரக்குமாரை வைத்து எடுக்கலாம் என்று முயற்சித்துள்ளார். பட்ஜெட் காரணமாக படம் தொடங்கவில்லையாம். அதன் பின்னர் வேறு படங்களை இயக்கிக் கொண்டிருந்த வெங்கடேஷ் ஷாஜகான் திரைப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு ரஜினிக்காக தான் எழுதிய கதையில் விஜய் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று அவரை அணுகியுள்ளார்.

பஞ்ச் வசனங்கள்

பஞ்ச் வசனங்கள்

மிகப் பெரிய ஆக்‌ஷன் படமாகெ இருக்கிறதே என்று முதலில் விஜய் தயக்கம் காட்டினாராம். அப்போது ரஜினி எப்படி படிப்படியாக கமெர்ஷியல் ஹீரோ ஆனார் என்பதை விளக்கி, விஜய்யை சம்மதிக்க வைத்துள்ளா. அந்தக் காலகட்டத்தில் ஷாஜகான், யூத், நினைத்தேன் வந்தாய் போன்ற சாஃப்ட்டான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய்யை முதன் முதலில் பஞ்ச் வசனம் பேச வைத்து நடிக்க வைத்தது வெங்கடேஷ் அவர்கள்தான். ஆண்டவன் கொடுக்கிறத யாராலும் தடுக்க முடியாது ஆண்டவன் தடுக்கிறத யாராலும் கொடுக்க முடியாது இது போன்ற வசனங்கள் படத்தில் ஆங்காங்கே இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.