கன்னியாகுமரி அருகே அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் சுற்றுலா வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவிலிருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 18பேர் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலுக்கு தனியார் வேன் மூலம் புறப்பட்டு சென்றனர். சுவாமிநாதபுரம் அருகே சென்ற போது தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து நிலைதடுமாறி சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சுற்றுலா வேனில் வந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.