விஜய், ரஜினி கூட செய்திடாத சாதனை! முறியடித்த தனுஷ்!

நடிகர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் தனுஷின் புகழ் நாளுக்கு நாள் பரவி கொண்டே செல்கிறது.  கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று அங்கும் தனது நடிப்புத்திறமையை காட்டி ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.  இவரது எளிமையான தோற்றம் பலரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.  ஷோபனா போன்று தங்களது வாழ்க்கையிலும் ஒரு பெண் கிடைக்கமாட்டாரோ என பல ஆண்மகன்கள் ஏங்கும் வகையில் இப்படத்தில் நித்யாமேனனின் கதாபாத்திரம் அமைந்திருந்தது. 

தனுஷ் குரலில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறை இளைஞர்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருப்பதால் இவரது பாடலுக்கு பலரும் அடிமை. தற்போது தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாது பலரின் காதுகளில் மேகம் கருக்காதா பெண்ணே, தேன்மொழி போன்ற பாடல்கள் ரிபீட் மோடில் ஓடிக்கொண்டிருக்கிறது.  இவ்வளவு பிரபலமான இந்த நடிகர் சமூக வலைத்தளங்களிலும் தமது கோலூன்றி ஆட்சி செய்ய தவறவில்லை.  இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தனுஷ் ஆக்டிவாக இருந்து வருகிறார், இதுவரை எந்த கோலிவுட் நடிகரும் சமூக வலைத்தளத்தில் செய்திடாத ஒரு சாதனையை தனுஷ் செய்துள்ளார்.  

ட்விட்டரில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 11 மில்லியனை எட்டியுள்ளது, இது தனுஷுக்கு கிடைத்த பெருமையென அவரது ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.  கடந்த ஆண்டில் இவரை 10 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்த நிலையில் இந்த ஆண்டு இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் அதிகரித்திருக்கிறது.  சமூக வலைத்தளத்தில் தனுஷ் செய்த சாதனையினை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

d

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.