பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் பல சுவராசியமான கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இளம் திறமையாளர்களை உலகிற்கு அறிமுகம் செய்வதில் அவர் முக்கியத்துவம் கொடுப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சில சுவாரசியமான அதே நேரத்தில் சில நகைச்சுவையான வீடியோக்களையும் பதிவு செய்து வரும் நிலையில் திருமண மண்டபத்தில் நடந்த சண்டை ஒன்றின் வீடியோவை சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.
மூன் லைட்டிங் என்றால் என்ன.. இது சரியானதா.. டெக் மகேந்திரா அருமையான விளக்கம்!

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த ஒரு ட்விட்டில் திருமண வீட்டில் ஒரே ஒரு அப்பளத்திற்காக நடந்த சண்டை குறித்து பதிவு செய்தார். இந்த சண்டைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்பளத்திற்கு சண்டை
கேரள மாநிலம் ஆலப்புழா என்ற இடத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் இரண்டாவது முறையாக அப்பளம் கேட்ட ஒருவருக்கு உணவு பரிமாறுபவர் அப்பளம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது அடிதடியில் முடிந்தது. திருமண விழாவிற்கு வந்தவர்களும் உணவு பரிமாறியவர்களும் கடுமையாக மோதிக் கொண்டதில் மண்டபத்தில் இருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.

திருமண மண்டப உரிமையாளர் காயம்
அது மட்டுமின்றி திருமண மண்டப உரிமையாளர் படுகாயமடைந்ததாகவும், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 15 பேர்களை கைது செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்த் மஹிந்திரா ட்விட்
ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடந்த அப்பளத்திற்கான இந்த சண்டை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் அந்த வீடியோ குறித்து தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் காமெடி பதிவு ஒன்றை செய்துள்ளார்.

புதிய வார்த்தை
ஒரே ஒரு அப்பளத்திற்காக சண்டை போட்டு கொள்வது என்ற பொருள் கொண்ட ஒரு புதிய வார்த்தையை உருவாக்க ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது என்று அவர் பதிவு செய்திருந்தார். இதற்கு பல நெட்டிசன்கள் புதிய பெயர்களை பரிந்துரைத்தனர். பாப்போகாலிப்ஸ் , பாப்பாஸ்ட்ரோபிக், பாப்போகாலிப்ஸ், பப்பட டமால்’ , ‘பப்பட டிஸ்யூம்’ உள்பட பல பெயர்களை அவருக்கு நெட்டிசன்கள் பரிந்துரை செய்தனர்.
Anand Mahindra’s tweet on ‘Pappadhamaka’ has Twitter amused
Anand Mahindra’s tweet on ‘Pappadhamaka’ has Twitter amused