வெந்து தணிந்தது காடு படம் பாக்குறதுக்கு முன்னால எல்லாரும் தூக்கத்த போடு!

சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சிம்பு மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனையடுத்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் இயக்குநர் கௌதம் மேனனுடன் சிம்பு மீண்டும் இணைந்துள்ளார். தற்போது சிம்புவும், கௌதமும் மீண்டும் இணைந்திருக்கின்றனர். அப்படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயரிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை தழுவி எடுக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி அதாவது நாளை  வெளியாகவுள்ளது. வெந்து தணிந்தது காடு படம் வெளியாகுவதற்கு முன்பே அனைவரின் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏனெனில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற முந்தைய இரு படங்களே.

இந்நிலையில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த கௌதம் மேனன் இ‌ந்த படம் ஒரு எதார்த்த இளைஞனின் கதை. இக்கதையின் வரும் கதாப்பாத்திரம் தற்போது உண்மையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இ‌ந்த கதைக்கு ஜெயமோகம் ஒரு புது முக நடிகரை வைத்து எடுங்க பெரிய ஹீரோ வேண்டாம் என்று சொன்னார். எனக்கு தெரிந்த ஹீரோ சிம்பு என்றார். இப்படத்தின் வெற்றியை பொருத்து தான் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். காலையில் 5 மணி காட்சிக்கு வரும் ரசிகர்கள் இரவு நன்றாக தூங்கிவிட்டு வரவும். ஏனென்றால் கதை மற்றும் கதாப்பாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்றார்.

இ‌ந்த வார்த்தையை பிடித்து கொண்ட நெட்டிசன்கள் இணையத்தளத்தில் வெந்து தனிந்தது காடு படம் பாக்குறதுக்கு முன்னால எல்லாரும் தூக்கத்த போடு! என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை இந்த படத்தின் வெந்து தணிந்தது காடு படத்தின் மறக்குமா நெஞ்சம் என்ற பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவரே எழுதியிருக்கும் இப்பாடலை பாடலாசிரியை தாமரை எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்துவருகிறது.

வெந்து தணிந்தது காடு - 6ஆம் தேதி வெளியாகிறது முதல் பாடல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.