ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என தகவல்…

டெல்லி: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில், இந்தியா சார்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என அறிவிக்கப் பட்டு உள்ளது.

கடந்த 9 ஆம் தேதி உடல் நலக்குறைவால்மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக அவரது உடல் நேற்று இரவு பங்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  நாளை முதல் 4 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

மறைந்த ராணிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும்  வகையில்,  லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்றம் அடங்கிய வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில்  4 நாள்கள் அரசியின் உடல் வைக்கப்படுகிறது.. அரசியின் இறுதிச் சடங்கு வருகிற செப். 19 நடைபெறுவதால் அதில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் லண்டன் வருகை தர உள்ளனர்.

இந்த நிலையில், இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 17ந்தேதி முதல் 3 நாள் பயணமாக லண்டன் செல்லும் திரௌபதி முர்மு 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலியை பதிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.