அமெரிக்காவில், ஜெப் பெசோசின் Blue Origin நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்தது.
மேற்கு டெக்சாஸில் உள்ள Blue Origin நிறுவன ஏவு தளத்திலிருந்து விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஏவப்பட்ட நியூ ஷெப்பர்ட் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில், அதன் பூஸ்டர் எஞ்சின்கள் எதிர்பாராத விதமாக எரிந்ததால் தடை செய்யப்பட்ட பகுதியில் விழுந்து நொறுங்கியது.
நாசாவின் சோதனைகளுக்கும், விண்வெளிக்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் ராக்கெட் அனுப்பப்பட்ட நிலையில், அதன் காப்சூல் பகுதி சரியான நேரத்தில் தனியாக பிரிந்து மீண்டும் தரையிறங்கியது.