பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின் இறுதி சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு.
இந்தியா சார்பில் துக்கத்தை பகிர்ந்து கொள்ள திரௌபதி முர்மு லண்டன் பயணம்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின் இறுதி சடங்கு விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளார்.
பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்தார்.
President Droupadi Murmu will be visiting London, United Kingdom on 17-19 September 2022 to attend the State Funeral of Queen Elizabeth II & offer condolences on behalf of the Government of India.
(File photos) pic.twitter.com/Nir194MBHg
— ANI (@ANI) September 14, 2022
இதனை தொடர்ந்து மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் வடக்கு அயர்லாந்தின் செயின்ட் கில்ஸ் கதீட்ரலில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19ம் திகதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
ராணியின் மறைவிற்கு உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் 500க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பில் துக்கத்தை பகிர்ந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உலக சுற்றுலாவில் கனேடிய குடும்பம்… கண் பார்வையை இழக்கும் மூன்று குழந்தைகள்: சோக பின்னணி!
பிரித்தானியாவிற்கு செப்டம்பர் 17ம் திகதி செல்லும் இந்திய குடியரசு தலைவர் செப்டம்பர் 19ம் திகதி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.