மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் 36 போலி நிறுவனங்களை உருவாக்கி 132 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்று கூறப்படும் ஜிஎஸ்டி கடந்த சில ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் மும்பையில் 132 கோடி மதிப்புள்ள போலி விலைப்பட்டியல் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.23 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனி வருமான வரிக்கு தனியாக ஜிஎஸ்டி வரி.. புதிய கட்டணம் அறிவிப்பு..!
வரி ஏய்ப்பு
மும்பையில் உள்ள தானே மாவட்டம் பிவண்டி என்ற பகுதியில் ஹஸ்முக் பட்டேல் என்பவர் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் போலியாக ரசீது தயாரித்து உள்ளார். அதன் மூலம் அவர் வரி ஏய்ப்பு செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
36 போலி நிறுவனங்கள்
இதுகுறித்து ஜிஎஸ்டி கமிஷனர் சுமித்குமார் அவர்களுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஹஸ்முக் பட்டேல் என்பவர் 36 போலி நிறுவனங்களின் பெயரில் இணையதளத்தை உருவாக்கி உள்ளதாகவும் அதன் மூலம் 132 கோடி மதிப்புள்ள சரக்குகளை அனுப்பியதாக போலி சான்றிதழ் உருவாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
போலி சான்றிதழ்கள்
போலி சான்றிதழ்களை இணையதளத்திலேயே உருவாக்கியுள்ள ஹஸ்முக், இந்த சான்றிதழ்களை ஜிஎஸ்டி அலுவலகத்தில் சமர்ப்பித்து ரூ.23 கோடிக்கும் அதிகமாக அவர் வரி ஏய்ப்பு செய்ததை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கைது
இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்தபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிபதி அவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு
கைது செய்யப்பட்ட ஹஸ்முக் மீது சிஜிஎஸ்டி சட்டம், 2017 இன் பிரிவு 132 ஐ மீறியதற்காக, சிஜிஎஸ்டி சட்டம், 2017 இன் பிரிவு 69 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Rs.132 crore GST fraud in Mumbai creating 36 fake companies
Rs.132 crore GST fraud in Mumbai creating 36 fake companies | 36 போலி நிறுவனங்கள்.. ரூ.132 கோடி ஜிஎஸ்டி மோசடி.. முக்கிய குற்றவாளி கைது!