சியோல்: கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு தென் கொரியா அபராதம் விதித்துள்ளது. தனியுரிமையை இந்த இரு நிறுவனங்களும் மீறியதாக கூறி விதிக்கப்பட்ட அபராதம் அதிர்ச்சி அளிப்பதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. தாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுடன் சட்டப்பூர்வமாக இணக்கமான முறையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்த கூகுளும், மெட்டாவும், தங்களுக்கு $72 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது நியாயமான செயல் இல்லை என்று அதிருதியை வெளிப்படுத்தியுள்ளன.
நாட்டின் தனியுரிமை சட்டத்தை மீறியதற்காக ஆல்பாபெட்டின் கூகுள் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்களுக்கு தென் கொரியா பல மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூகுள் நிறுவனத்திற்கு 69.2 பில்லியன் வோன் ($50 மில்லியன்) மற்றும் மெட்டா நிறுவனத்திற்கு 30.8 பில்லியன் வோன் ($22 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தென் கொரியாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SEOUL (AP) — South Korea’s privacy watchdog has fined Google and Meta a combined 100 billion won ($72 million) for tracking consumers’ online behavior without their consent and using their data for targeted advertisements. https://t.co/wu3aVQvecY
— Tong-hyung Kim (@KimTongHyung) September 14, 2022
அபராதம் விதிக்கப்பட்டுள்ள கூகுள் மற்றும் மெட்டா ஆகிய இரு நிறுவனங்களும் பயனர் தகவல்களைப் பற்றித் தெளிவாகச் சொல்லாமலேயே அல்லது நடத்தைத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்கு அவர்களின் இசைவைப் பெறாமலேயே, தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களுக்கு அவற்றை சேகரித்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் இந்த அபராதம் தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்திய இரு நிறுவனங்களும், தாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுடன் சட்டப்பூர்வமாக இணக்கமான முறையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தன.
மேலும் படிக்க | அதிர்ச்சியில் ஊழியர்கள்! 200 பேரை பணி நீக்கம் செய்த Microsoft
“பிஐபிசியின் கண்டுபிடிப்புகளுடன் நாங்கள் உடன்படவில்லை, அது எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டவுடன் முழு எழுத்துப்பூர்வ முடிவை மதிப்பாய்வு செய்வோம்” என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
“பயனர்களின் கட்டுப்பாட்டையும் வெளிப்படைத்தன்மையையும் வழங்கும் தற்போதைய புதுப்பிப்புகளைச் செய்வதில் எங்களின் உறுதிப்பாட்டை நாங்கள் எப்போதும் நிரூபித்துள்ளோம், அதே நேரத்தில் மிகவும் பயனுள்ள தயாரிப்புகளை வழங்குகிறோம். தென் கொரிய பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க PIPC உடன் ஈடுபடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”
“நாங்கள் கமிஷனின் முடிவை மதிக்கிறோம், உள்ளூர் விதிமுறைகளுக்குத் தேவையான செயல்முறைகளைப் பூர்த்தி செய்யும் சட்டப்பூர்வமாக எங்கள் வாடிக்கையாளர்களுடன் நாங்கள் பணியாற்றி வருவதாக நாங்கள் நம்புகிறோம். எனவே, கமிஷனின் முடிவை நாங்கள் ஏற்கவில்லை.”
மேலும் படிக்க | கூகுளிடம் இருக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்: நீக்குவதற்கான வழிமுறை
இதற்கிடையில், போட்டியாளர்களைத் தடுக்க கூகுள், ஆண்ட்ராய்டு மொபைல் இயங்குதளத்தைப் பயன்படுத்தியதற்காக ஒரு உயர்மட்ட ஐரோப்பிய நீதிமன்றம் ஒன்று 4.125 பில்லியன் யூரோக்கள் ($4.13 பில்லியன்) அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆல்பாபெட் (GOOGL.O) போட்டியாளர்களைத் தடுக்க கூகுள், ஆண்ட்ராய்டு மொபைல் இயங்குதளத்தைப் பயன்படுத்திய விவகாரத்தில் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்திருந்தது. ஆனால் இன்று (2022, செப்டம்பர் 14) வழங்கப்பட்ட தீர்ப்பில் ஐரோப்பாவின் இரண்டாவது உயர் நீதிமன்றம் முந்தைய தீர்ர்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், அபராதம் 4.34 பில்லியன் யூரோக்களில் இருந்து குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கூகுள் குரோமை பயன்படுத்த வேண்டாம் – சைபர் குழு எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ