இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று வெளியிட்டார்.
இப்புதிய தொழிற்சாலை மூலம் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ்-ஐ பாதி விலையில் வாங்க முடியும் என்றும், இதுதான் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ‘எண்ணெய்’ என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.200 கோடி மதிப்பிலான 7 ஸ்டார் ரிசார்ட் இடிப்பா? இன்னொரு நொய்டா நடவடிக்கை!
வேதாந்தா குழுமம்
வேதாந்தா குழுமம் குஜராத்தில் நாட்டின் முதல் செமிகண்டக்டர் சிப் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ் ஆலையைச் சுமார் ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் அமைக்கவுள்ளதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று அனில் அகர்வால் தெரிவித்து மட்டும் அல்லாமல் வேதாந்தா & பாக்ஸ்கான் மற்றும் குஜராத் மாநில அரசும் இதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.
10 சதவீதம் உயர்வு
இந்த அறிவிப்பின் எதிரொலியாகச் செப்டம்பர் 14 அன்று வேதாந்தா லிமிடெட் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்தது, தலைவர் அனில் அகர்வால் சொத்து மதிப்பு இன்று மட்டும் 579 மில்லியன் டாலர் அதிகரித்து 2.6 பில்லியன் டாலராக உள்ளது.
வேதாந்தா & பாக்ஸ்கான்
வேதாந்தா & பாக்ஸ்கான் இணைந்து அமைப்பும் இப்புதிய தொழிற்சாலை மூலம் அடுத்த 2 வருடத்தில் உற்பத்தி துவங்கப்படும் என்றும், இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் 40000 ரூபாய்க்கு தயாரிக்க முடியும் என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா
மேலும் அனில் அகர்வால்-ன் வேதாந்தா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்வதற்காகப் மகாராஷ்டிரா-வில் புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் அனில் அகர்வால் மகாராஷ்டிரா-வில் ஆப்பிள் ஐபோன் முதல் டிவி உபகரணங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளதாக அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரிக் வாகனங்கள்
இதன் பின்பு இவ்விரு திட்டங்களும் வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் பெரிய அளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் அனில் அகர்வால் இத்துறையிலும் இறங்க திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Vedanta shares up 10 percent ahead of Gujarat semiconductor chip announcement
Vedanta shares up 10 percent and Anil Agarwal wealth raise up 579 million dollar to 2.6 billion dollar ahead of Gujarat semiconductor chip announcement