பெங்களூரு : கர்நாடகாவில் கனமழை, வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ், சட்டசபையில் விவாதிக்க வாய்ப்பளிக்கும்படி, சட்டசபை செயலருக்கு நேற்று காங்கிரஸ், ம.ஜ.த., தனித்தனியாக நோட்டீஸ் அளித்துள்ளன.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் குமாரசாமி, தனித்தனியாக நோட்டீஸ் அளித்து, மழை சேதம் தொடர்பாக விவாதிக்க வாய்ப்பளிக்கும்படி கோரினர்.
சித்தராமையா அளித்த நோட்டீசில், ‘மே மாதத்திலிருந்து மாநிலத்தில் மழை பெய்வதால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரிலும் மழையால் மக்கள் நெருக்கடியில் சிக்கிஉள்ளனர். பயிர்கள் பாழானது.இந்த விஷயமாக, ஒத்தி வைப்பு தீர்மானத்தின் கீழ் சட்டசபையில் விவாதிக்க வேண்டும். 25 லட்சம் ஏக்கர் பகுதியில், பயிரிடப்பட்ட பகுதிகள் பாழானது.’சேதமான வீடுகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. பெங்களூரு, ராம்நகர், பாகல்கோட், துமகூரு உட்பட பல நகரங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்து, பெருமளவில் சொத்துகள் பாழானது.இது குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் வாய்ப்பளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
குமாரசாமி அளித்த நோட்டீசில், ‘மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை, விண் வழியாக ஆய்வு செய்து, வெள்ளப்பெருக்கு பிரச்னைகளை நிர்வகிப்பதில், மாநில அரசு தவறியுள்ளது. மூன்று மாதங்களாக மழை பெய்கிறது. 27 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.’மேலும், நுாற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்தன. 187 கிராமங்கள் வெள்ளக்காடாக மாறின. 29 ஆயிரத்து 967 பேர், வெள்ளத்தால் பாதிப்படைந்தனர். 5.8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைச்சல் பாழானது. ’29 ஆயிரத்து 794 வீடுகள் இடிந்தன. 22 ஆயிரத்து 734 கி.மீ., துாரத்துக்கு சாலைகள் பாழாகின. இதுகுறித்து விவாதிக்க, விதிமுறை 60ன் கீழ் வாய்ப்பளிக்க வேண்டும்’ என, கோரிஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement