பெலகாவி : பெலகாவி மாவட்டத்தில், நடந்து வரும் கல்குவாரி தொழிலால், ஹரினாளா அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள், உயிரை கையில் பிடித்தபடி வாழ்கின்றனர்.பெலகாவி பைலஹொங்கலாவின், மரிகட்டி, கனிகொப்பா கிராமங்களில் கற்களை பொடியாக்கும் குவாரிகளில், ஜெலட்டின் வெடிக்கப்படுகிறது. இதனால் கிராமத்தினர், விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி, சுற்றுச்சூழலும், நீர் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.சுரங்கம், நில ஆய்வியல் துறை நிர்ணயித்த நெறிமுறைகள், விதிமுறைகளை மீறி, வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெடிகளின் வீரியம் அதிகம் கொண்டதால், குவாரி அருகில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாவலகட்டி திகடி கிராமங்களின் நடுவில் உள்ள, ஹரினாளா அணையும் கூட, அபாயத்தை எதிர் கொண்டுள்ளது.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அணை சுற்றுப்புறத்தின், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்குகிறது. இத்தகைய அணைக்கு, கல்குவாரிகள் ஆபத்தை ஏற்படுத்திஉள்ளன.அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள திகடி, கல்லுர், சம்பாவ் உட்பட சில கிராமங்களின் மக்கள் உயிரை கையில் பிடித்தபடி வசிக்கின்றனர்.கற்களை பொடியாக்கும் குவாரிகளில், விதிமுறைகள் மீறப்படுவது, என் கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மடிகட்டே, கானிகொப்பா கிராமங்களின், 13 குவாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். பதிலளிக்க தவறினால், குவாரிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
லோகேஷ் குமார், துணை இயக்குனர், சுரங்கம், நில ஆய்வியல் துறை
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement