அமெரிக்காவை சேர்ந்த கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
கடுமையான பொருளாதார தாக்கம், பணவீக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அமெரிக்க நிறுவனம் தங்களது 80 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை மாதிரி தூங்குற ஆள் நானு.. ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்யும் அனில் அகர்வால்..!
Patreon நிறுவனம்
உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக அமெரிக்காவின் Patreon நிறுவனம் 80 பேரை அல்லது சுமார் 17 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை Patreon தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் காண்டே அவர்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
வேலைநீக்கம்
இதுகுறித்து ஜாக் காண்டே அவர்கள் கூறியபோது, ‘இன்று எங்கள் நிறுவனத்தின் 80 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளோம். எங்கள் குழுவில் சுமார் 17 சதவீதம் பேர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள்.
கடினமான முடிவு தான்
இந்த முடிவிற்கான காரணங்களை நான் அறியும் முன், இன்று எங்கள் குழுவில் பெரும்பாலோருக்கு கடினமாக இருக்கும் என்பதையும், நிறுவனத்தை விட்டு வெளியேறுபவர்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும் என்பதையும் நான் உணர்ந்துள்ளேன்’ என்று ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம்
கடந்த 9 மாதங்களில் நிறுவனத்தின் பொருளாதாரம் கணிசமாக மாறுவதை கண்டோம். உங்களில் பலர் என்னை சந்தித்து பணிநீக்க நடவடிக்கையை பரிசீலனை செய்ய என்னிடம் கேட்டீர்கள். ஆனால் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்ததில் பணிநீக்க நடவடிக்கையை தவிர்க்க முடியவில்லை என நான் உங்களுக்கு பதில் கூறியுள்ளேன். இன்று அந்த நடவடிக்கையை வருத்தத்துடன் எடுத்துள்ளோம்’ என்றும் காண்டே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணீருடன் வெளியேற்றம்
Patreon நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மிகுந்த வருத்தத்துடன் கண்ணீருடன் நிறுவனத்தை விட்டு வெளியேறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
Patreon lays off 17 percent employees Amid Tough Global Market Condition
Patreon lays off 17 percent employees Amid Tough Global Market Condition | வேலைநீக்கம் செய்யும் மற்றொரு அமெரிக்க நிறுவனம்.. கண்ணீரில் ஊழியர்கள்