சினிமாவில்
கெத்துக்காட்டும்
பல
ஹீரோக்கள்
நிஜ
வாழ்க்கையில்
சட்ட
அறிவு
இல்லாமல்
சாதாரண
குற்றங்களில்
கூட
சிக்கிக்கொண்டு
தடுமாறுகின்றனர்.
திரைப்படங்களில்
போலீஸாக,
வக்கீலாக
நடித்தால்
மட்டும்
போதுமா
அடிப்படை
சாதாரண
சட்ட
ஞானம்
கூட
இல்லாமல்
இருக்கலாமா?
சிறிய
அளவில்
தண்டனைக்கூட
கிடைக்காத
சட்டப்பிரிவுக்குக்
கூட
பயந்து
தலைமறைவான
சினிமா
ஹீரோக்களும்
திரையுலகம்
பார்த்தது.
அந்த
வகையில்
விசாரணைக்கு
பயந்து
மீரா
மிதுன்
தலைமறைவாகியுள்ளார்.
மாய
உலகம்
திரையுலகம்
நிஜம்
அதன்
முகமே
வேறு
திரையுலக
வாழ்க்கை
மிக
சொகுசான
ஒரு
மாய
உலகம்.
அதுவும்
தற்போதுள்ள
சமூக
வலைதள
காலக்கட்டத்தில்
ஒரு
நடிகை
அல்லது
நடிகரை
போற்றி
பாடும்
ரசிக
மனப்பான்மை
அதிகம்
உள்ள
பெருங்கூட்டமாக
மாறி
வருவதை
பார்க்கிறோம்.
சினிமா
நிகழ்ச்சிகள்
ப்ரமோஷன்
நிகழ்ச்சிகளுக்காக
ஆயிரக்கணக்கில்
இளம்
சமுதாயத்தினர்
அலைமோதி
ஒரு
இடத்தில்
5
மணி
நேரத்திற்கு
மேல்
தங்கள்
பொன்னான
நேரத்தை
விரயம்
செய்வது
சமீப
காலங்களில்
வெகு
சாதாரண
நிகழ்வாக
மாறி
போனது.
கல்லூரிகள்
இலக்கிய
கூட்டங்கள்
போய்
சினிமா
ப்ரமோஷன்கள்
ஆக்கிரமிப்பு
இந்த
பித்தம்
சமீப
காலமாக
கல்லூரிகளிலும்
பரவி
வருகிறது.
கல்லூரிகளில்
அறிவார்ந்தவர்களை,
நிபுணர்களை
அழைத்து
வந்து
கூட்டங்கள்
நடத்திய
காலம்
போய்
கல்லூரி
நிர்வாகமும்,
பேராசிரியர்களும்
தங்கள்
கல்லூரிகளில்
சினிமா
பட
ப்ரமோஷனுக்காக
நடிகர்
நடிகைகளை
வரவழைத்து
மாணவ
மாணவிகளை
திரட்டி
அமரவைப்பதும்,
பெரிய
விஷயம்
போல்
நடிகர்
நடிகைகள்
விஷயங்கள்
அலசப்படுவதும்
நடக்கிறது.
அவர்
நடிக்கிறார்,
சம்பாதிக்கிறார்
பிடித்தால்
ரசிப்போம்
அல்லது
கடப்போம்
என்கிற
நிலையை
கடந்து
அவர்களை
தூக்கி
வைத்து
கொண்டாடும்
மனோபாவத்தை
கல்லூரி
பருவத்திலேயே
வளர்க்கிறார்கள்.
கொண்டாட்ட
மனப்பான்மையில்
போற்றப்படுவதால்
உண்மை
நிலையை
மறக்கும்
பிரபலங்கள்
இதுபோன்ற
கொண்டாட்டங்களை
பார்க்கும்
பிரபலங்கள்
(தற்போதெல்லாம்
சீரியலில்,
டிவி
நிகழ்ச்சிகளில்
தலைக்காட்டினாலே
அவர்
பிரபலம்)
அங்கு
அவர்களுக்கு
கிடைக்கும்
வரவேற்பு,
போலீஸ்
அதிகாரிகளே
உடன்
நின்று
செல்ஃபி
எடுத்துக்கொள்வது
என்பதையெல்லாம்
பார்க்கும்போது
இவையெல்லாம்
நிஜம்
என
நம்புகின்றனர்.
இதற்கு
காரணம்
யதார்த்தமான
கேள்விகள்
அல்லது
விமர்சனங்கள்
அவர்கள்
முன்
வைக்கப்படுவதில்லை.
யதார்த்தமற்ற
காட்சிகள்
கூட
போற்றுதலுடன்
ரசிக்கப்படுவதால்
தாங்கள்
எடுப்பதுதான்
சரி
என்று
அவர்கள்
நினைக்கின்றனர்.
சமீபத்தில்
ஒரு
பெரிய
பிரபலத்தின்
படம்
அப்படித்தான்
கொண்டாடி
ஓட்டப்பட்டது.
அஞ்சு
கொலை
செய்துட்டு
அசால்டாக
சுற்றும்
ஹீரோ
அல்ல
நிஜ
வாழ்க்கை
இதனால்
கொலை,
கொள்ளை,
வன்முறைக்காட்சிகளை
வைத்து
படமெடுப்பவர்
அதில்
நடிப்பவர்
திரைப்படத்தில்
கொலை
செய்துவிட்டு
அடுத்தக்காட்சியில்
சிறை
வழக்கு
எதுவும்
இல்லாமல்
டீக்கடையில்
டீ
குடித்துக்கொண்டிருப்பது
போல்
நிஜ
வாழ்க்கையும்
அப்படித்தான்
என
தங்களது
ஆழ்ந்த
சட்ட
ஞானத்தை(?)
வைத்து
முடிவு
செய்கின்றனர்.
இதன்
விளைவு
குடித்து
விட்டு
வாகனம்
ஓட்டுவதுகூட
சட்டப்படி
குற்றம்
என
தெரியாமல்
சிக்கியப்பின்
இது
சாதாரண
அபராதம்
மற்றும்
லைசென்ஸ்
ஆறுமாதம்
சஸ்பென்ஸ்
செய்யப்படும்
விதிமீறல்
குற்றம்
தான்
என்பதை
அறியாமல்
தப்பி
ஓடி
ஒளிந்து
பத்திரிக்கையில்
வந்து
அசிங்கப்பட்டனர்.
நல்ல
மனிதர்
பிரபல
ஹீரோ
சட்டத்தை
எதிர்நோக்க
பயந்ததால்
சிக்கலில்
சிக்கினார்
அவர்
ஒரு
பிரபல
நடிகர்,
சமீப
காலமாக
போலீஸ்
வேடங்களில்
வெளுத்து
வாங்குகிறார்.
யார்
வம்பு
தும்புக்கும்
போகாத
நல்ல
மனிதர்.
ஒரு
பார்ட்டியில்
அட்டெண்ட்
பண்ணிவிட்டு
வரும்போது
தனது
காரை
போலீஸ்
வேனில்
மோதிவிட்டார்.
மது
அருந்தி
மோதிய
விபத்து
தான்
கிரிமினல்
குற்றமல்ல.
ஆனால்
அவர்
தப்பி
ஓடி
பின்னர்
அழைத்து
வந்து
ஸ்டேஷனுக்கு
அழைத்துச்
செல்லும்போது
சாதாரண
போலீஸ்
நடைமுறைக்கு
பயந்து
மீண்டும்
தலைமறைவானார்.
பின்னர்
போலீஸ்
உயர்
அதிகாரிகள்
சட்டத்தின்
கடுமையை
அவருக்கு
காட்டியவுடன்
சரண்
ஆகி
அபராதம்
கட்டினார்.
அதற்குள்
அவரே
அவருக்கு
அவமானத்தை
தேடிக்கொண்டார்.
சாலை
விபத்துக்கு
பயந்து
ஓடி
அவமானப்பட்ட
பிரபல்
ஹீரோ
இன்னொரு
பிரபல
ஹீரோ
சாலையின்
தடுப்பின்
மீது
தனது
வாகனத்தை
மோதிவிட்டார்.
காரில்
அவருடன்
நடித்த
வேறு
சில
பிரபலங்களும்
இருந்தனர்.
மது
அருந்தி
வாகனத்தை
ஓட்டியதால்
வாகனத்தை
பறிமுதல்
செய்து
மறுநாள்
ஸ்டேஷன்
வரச்சொன்னார்கள்.
சாதாரண
விபத்து
வழக்கு
அபராதம்
கட்டி
காரை
எடுக்கணும்,
லைசென்ஸ்
சஸ்பெண்ட்
ஆகும்.
கிரிமினல்
குற்றமல்ல
அவர்
செய்தது.
ஆனாலும்
விசாரணைக்கு
ஆஜராகாமல்
தலைமறைவாகி
நீதிமன்றத்தில்
ஜட்ஜ்
முன்
ஒரு
நாள்
முழுவதும்
நிற்கவைக்கப்பட்டு,
ஜட்ஜ்
அறிவுரை
சொல்லி,
அபராதம்
போட்டு
அனுப்பி
வைக்கப்பட்டார்.
சினிமா
காட்சி
அல்ல
நிஜ
வாழ்க்கையில்
சட்ட
நடைமுறை
இதைச்
சொல்ல
காரணம்
சினிமா
போலீஸ்
வேறு
நிஜ
போலீஸ்
வேறு.
சட்டம்
தன்
கடமையை
செய்யும்.
சட்ட
ஞானம்
இருந்தால்
போலீஸுடன்
ஒத்துழைத்து
வழக்கை
எளிதாக
முடித்துவிட்டு
போகலாம்.
தப்பி
ஓடினால்
கைத்தட்டுபவர்கள்
செல்ஃபி
எடுத்துக்கொள்பவர்களே
அடுத்த
நாள்
இதுபோன்று
சிக்கினால்
கண்டபடி
பேசுவார்கள்.
ட்விட்டரில்
போட்டு
ட்ரோல்
செய்வார்கள்.
இன்னொரு
பிரபலம்
சாதாரணமாக
சில
லட்சம்
கட்டும்
அபராதத்துக்கு
எதிராக
வழக்கு
தொடுத்து
கோர்ட்
செலவாக
அதைவிட
பன்
மடங்கு
செலவழித்தார்.
இதுதான்
தற்போது
மீரா
மிதுன்
விவகாரத்திலும்
நடந்துள்ளது.
மீரா
மிதுன்
பிரபலம்
என்பதை
தாண்டி
பிரச்சினையில்
தானே
தலையைக்
கொடுப்பவர்
எனலாம்.
நெகட்டிவ்
பப்ளிசிட்டியில்
ஆளான
மீரா
மிதுன்
அவர்
பிரபலமானதே
மாடலிங்
நடத்திய
தனது
நண்பருடன்
சண்டைப்போட்டு
போலீஸ்
புகாருக்கு
ஆளானது,
செல்போனில்
ஆள்
வைத்து
அடிக்க
பேசி
சிக்கியது
என
நெகட்டிவ்
பப்ளிசிட்டிதான்
அதிகம்.
ஒரு
நட்சத்திர
ஹோட்டலில்
பிரஸ்
மீட்
வைத்து
சட்ட
விரோதமாக
பேச
ஹோட்டல்
ஆட்கள்
பயந்து
கிளம்பச்சொல்ல
அங்கும்
தகராறு
செய்து
அந்த
வழக்கும்
அவர்மீது
உள்ளது.
இந்நிலையில்
பிக்பாஸில்
கலந்துக்கொண்டு
மேலும்
பிரபலமானார்.
அதில்
புகழ்பெற்ற
பல
தேசிய
விருதுகளை
வாங்கிய
இயக்குநர்
சேரனை,
குஷி
படத்தில்
விஜய்யை
ஜோதிகா
குற்றம்
சாட்டுவதுபோல்
குற்றம்
சாட்டி
பிரச்சினை
ஆகி
பின்னர்
குறும்படம்
காட்டி
கமல்
பிரச்சினை
முடித்து
வைத்தார்.
மீரா
மிதுன்
நீதிமன்ற
விசாரணையில்
புறக்கணிப்பது
ஆபத்து
மீரா
மிதுன்
வழக்கு
விசாரணையில்
ஆஜராகி
தான்
வன்கொடுமை
சட்டம்
பற்றி
தெரியாமல்
பேசி
விட்டேன்
அந்த
அளவுக்கு
என்
பேச்சில்
உள்நோக்கம்
இல்லை,
என்று
மன்னிப்பு
கோரியிருந்தால்
ஒருவேளை
நீதிமன்றம்
எச்சரித்துக்கூட
விடுவித்திருக்க
வாய்ப்புண்டு.
ஏனென்றால்
அவர்
நேரடியாக
ஒருவரை
திட்டி
அவர்
புகார்
கொடுக்கவில்லை.
ஆனால்
மீராமிதுன்
வழக்கு
பதிவு
செய்தபோதே
தப்பி
ஓடி
தலைமறைவானார்.
கைது
செய்தபோது
போலீஸாருடன்
ஒத்துழைக்காமல்
கமிஷனர்
அலுவலகத்திலும்
பிரச்சினை
செய்தார்.
அவர்
மீது
போடப்பட்ட
செக்ஷன்
வன்கொடுமைச்
சட்டம்.
இந்த
வழக்கை
ஒரு
ஸ்டேஷனில்
இன்ஸ்பெக்டர்
கூட
போட
முடியாது
உதவி
ஆணையர்
மட்டுமே
போட
முடியும்
அப்படிப்பட்ட
முக்கியத்துவமான
வழக்கில்
முரண்டு
பிடித்தால்
பல
ஆண்டுகள்
சிறைவாசம்
கிடைக்க
வாய்ப்புண்டு.
விஜிலென்ஸ்
டிஜிபி
ரேஞ்சுக்கு
கெத்து
காட்டிய
மீரா
மிதுனின்
மீரா
மிதுனுக்கு
சட்டத்தில்
உள்ள
சிக்கல்களை
புரிய
வைக்க
ஆட்கள்
இல்லை,
அவர்
பழகும்
ஆட்களும்
அவரைப்போல்
தானே
இருப்பார்கள்.
வழக்கமான
திரையுலகினர்
மற்ற
விஷயங்களில்
செய்வது
போல
மீரா
மிதுன்
இந்த
வழக்கில்
நடந்துக்கொள்கிறார்.
இது
அவருக்கு
சிக்கலை
உருவாக்கும்.
முடிவாக
மீரா
மிதுனின்
சட்ட
அறிவு
பற்றி
சின்ன
சம்பவம்.
ஒருநாள்
அவர்
டெல்லியில்
விஜிலென்ஸ்
மற்றும்
மனித
உரிமை
என
போலிகள்
நடத்தும்
ஏதோ
ஒரு
அமைப்பில்
பணம்
கட்டி
மெம்பராகி
தமிழகத்தின்
விஜிலென்ஸ்
அதிகாரி
என
போஸ்டிங்
வாங்கிவிட்டார்.
அவ்வளவுதான்
இனி
தமிழகத்தில்
யார்
ஊழல்
செய்தாலும்
நான்
விட
மாட்டேன்
என
தமிழக
லஞ்ச
ஒழிப்பு
டிஜிபி
ரேஞ்சுக்கு
பதிவிட்டிருந்தார்.
இதுதான்
அவரது
பொது
அறிவு.