ஊழியர்களை எச்சரித்த இன்போசிஸ்… “மூன்லைட்டிங்" தடைக்கு இதுதான் காரணம்!

இன்போசிஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு இமெயில் மூலம் ஒரு கறார் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, இன்போசிஸ் நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர் வேறு எந்த நிறுவனத்துடனும் பார்ட் டைம் புராஜெக்ட் அல்லது தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

இன்போசிஸ்

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போதே மற்றொரு நிறுவனத்திற்கு பார்ட் டைம் வேலை பார்ப்பதற்கு ஆங்கிலத்தில் ‘மூன் லைட்டிங்’ என்று பெயர். இந்தக் கருத்தாக்கத்தின்படி, ஒரு ஊழியர் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவருக்கு இருக்கும் ஃப்ரீ டைமில் வேறு நிறுவனங்களுக்கு வேலை செய்ய அனுமதி அளிக்கிறது.

தற்போது இன்போசிஸ் அனுப்பிய இமெயிலில் “நோ டு டைமிங், நோ மூன் லைட்டிங்’’ என்ற தலைப்பில் ஊழியர்கள் விதிகளை மீறி வேறு நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தால், பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி இந்த நடைமுறையை ஏமாற்றுதல் என்று சென்ற மாதம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இமெயிலில் ஊழியர்களுக்கு “உங்கள் ஆஃபர் லெட்டரில் தெளிவாக குறிப்பிட்டபடி, இன்போசிஸின் அனுமதியின்றி எந்த ஒரு நிறுவனத்திலும் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ வேலையில் சேர மாட்டோம் என்ற உறுதிமொழிக்கிணங்க நடந்துகொள்ளுங்கள்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோவிட்-19 லாக்டவுன் காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்டில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டபோது `மூன் லைட்டிங்’ என்னும் நடைமுறை வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பாக, ஐ.டி துறையில் தங்கள் ஊழியர்கள் ஒரே நேரத்தில் மற்ற நிறுவனங்களுக்கான திட்டங்களில் பணிபுரிய ‘ரிமோட் ஏரியா ஒர்க்’ என்னும் வேலை செய்யும் வசதியை பயன்படுத்துகிறார்கள் என்பதை ஐ.டி நிறுவனத்தின் சீனியர் மேனேஜர்கள் அறிந்துகொண்டனர்.

இன்போசிஸ்

ஐ.டி நிறுவனங்கள் `மூன் லைட்டிங்’ படி, “ஊழியர்கள் ஒரே சமயத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு வேலை பார்த்தால், அது முதன்மை நிறுவனத்தில் டேட்டா லீக் மற்றும் குறைந்த ஈடுபாடு ஆகிய பிரச்னைகளை உருவாக்கும்” என்கிறார்கள்.

டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (TCS) நிறுவனத்தின் தலைவர் ஒரு நிகழ்ச்சியில் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர், “குறுகிய கால ஆதாயங்களுக்காக இதுபோன்ற நடைமுறைகளில் ஈடுபட்டால் நீண்ட காலத்தில் நீங்கள் வேலைவாய்ப்பைக்கூட இழக்க நேரிடும்” என்று ஊழியர்களை எச்சரித்தார்.

இந்தியாவில் முதன்முதலாக உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி `மூன் லைட்டிங்’ கான்செப்ட்டை ஆதரித்தது. அதாவது, ஸ்விக்கி ஊழியர்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது பல நிறுவனங்களுக்கு டெலிவரி செய்யலாம். மேலும் தொழில் துறையின் முதல் “மூன் லைட்டிங் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்” அறிமுகப்படுத்தியது.

SWIGGY

ஸ்விக்கி நிறுவனம் இதை ஆதரிக்கக்  காரணம், தங்கள் ஊழியர்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளத்தான் என்கிறது.

இந்த `மூன் லைட்டிங்’ கருத்தாக்கம் சேவை அடிப்படையில் இருக்கும் சில சிறிய நிறுவனங்களுக்கு வேண்டுமானாலும் சரியாக இருக்கலாமே தவிர, எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் சரியாக இருக்குமா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்தான்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.