புதுடில்லி : ‘அதானி’ குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, விரைவில், உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில், இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, மூன்றாவது இடத்தில் உள்ளார்.
‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸ், ஒரே நாளில், கிட்டத்தட்ட 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததை அடுத்து, அவரது இடத்தை, கவுதம் அதானி பிடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.கவுதம் அதானி மற்றும் ஜெப் பெசோஸ் ஆகிய இருவருக்கும் இடையேயான சொத்து மதிப்பின் வித்தியாசம், தற்போது, 24 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
அமெரிக்காவின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததால், பங்குச் சந்தைகள் நேற்று வீழ்ச்சி கண்டன. இதன் தொடர்ச்சியாக, ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பும், ஒரே நாளில் 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இதுவே கவுதம் அதானி, இரண்டாவது இடத்துக்கு முன்னேற வழிவகுத்துள்ளது.
முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் சொத்து மதிப்பும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவைக் கண்டு உள்ளது.அதேசமயம், கவுதம் அதானியின் சொத்து மதிப்பு, இதே நாளில் 12 ஆயிரத்து, 482 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ தரவுகளின் படி, எலான் மஸ்க் சொத்து மதிப்பு 20.22 லட்சம் கோடி ரூபாயாகவும்; ஜெப் பெசோஸ் மதிப்பு 11.85 லட்சம் கோடி ரூபாயாகவும்; கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 11.61லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement