ஆமதாபாத், :குஜராத்தில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்ததில், அதில் வந்த கட்டட தொழிலாளர்கள் ௭ பேர் நேற்று உயிரிழந்தனர். குஜராத்தின் ஆமதாபாத் நகரில், அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் எட்டு பேர், ஏழாவது தளத்தில் இருந்து லிப்டில் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, லிப்டின் இரும்பு கயிறு அறுந்து, வேகமாக தரையில் வந்து மோதியது. இதில், ஏழு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; ஒருவர் பலத்த காயமடைந்தார்.இச்சம்பவம் குறித்து மாநகர மேயர் கே.ஜே.பார்மர் கூறுகையில்,”மாநகராட்சியின் விதிகளை மீறி கட்டடம் கட்டப்படுகிறதா என்றும், தவறான முறையில் கட்டட வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் ஆராய்ந்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
ஆமதாபாத், :குஜராத்தில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்ததில், அதில் வந்த கட்டட தொழிலாளர்கள் ௭ பேர் நேற்று உயிரிழந்தனர். குஜராத்தின் ஆமதாபாத் நகரில், அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் கட்டுமான பணி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்