கோவையில் பள்ளி கழிவறையில் விஷம் குடித்த மாணவி

கோவை: கோவையில் பள்ளி கழிவறையில் பிளஸ் 1 மாணவி விஷம் குடித்தார். இது தொடர்பாக போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர். கோவை மரக்கடை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கோவை நகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் முன் விரோதம் காரணமாக அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் மாணவி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவர்கள் ஜாடையாக பேசி வந்துள்ளனர். இதில் மனம் உடைந்த மாணவி பின்னர் பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் தனது பையில் கொசு மருந்து திரவம் வைத்திருந்ததாக தெரிகிறது.

பள்ளியில் கழிவறைக்கு சென்ற அவர் அந்த விஷ மருந்தை குடித்தார். மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக வெரைட்டிஹால் ரோடு போலீசார், மாணவியை மிரட்டுதல், தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின்கீழ்  சுமையா (22), சிபானா பர்வின் (24), ரசீதா (50) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.