இந்தியாவில் நுகர்வோர்களின் டேட்டாக்கள் கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் அதை பணமாக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் கூட நுகர்வோர்களின் டேட்டாக்களை விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நுகர்வோர்களின் தனி உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவர் ரபிசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உஷார்!!! மின் கட்டணம் செலுத்த சொல்லி மோசடி.. கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டி ரபி சங்கர் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது நுகர்வோர்களின் தனியுரிமையை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் தேவை என்பதை வலியுறுத்தினார். இது நுகர்வோர் டேட்டாவை பணமாக்குவது பொறுப்பான முறையில் செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
டேட்டா பாதுகாப்பு மசோதா
கடந்த மாதம் லோக்சபாவில் தனிநபர் டேட்டா பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற்றதையடுத்து, அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றும் என நம்புவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இந்த புதிய சட்டத்தில் நுகர்வோர் தனியுரிமை பாதுகாக்கப்படும் என்று தான் நம்புவதாக ரபிசங்கர் கூறினார்.
டிஜிட்டல் மயம்
இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் வேகமாக வளர்ந்து வருவதால், நாட்டில் டேட்டாக்கள் அதிகளவில் கிடைக்கின்றது என்றும் இந்த டேட்டாக்களை பணமாக்க முடியும் என்றும், ஆனால் அதற்கென விதிமுறைகளை வைத்திருக்க வேண்டும் என்றும் ரபிசங்கர் தெரிவித்தார். இதனால் வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, பொறுப்பான முறையில் அதனை பணமாக்குவதையும் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒப்புதல்
மேலும் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை பணமாக்கும்போது அவர்களுடைய ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். வாடிக்கையாளர்களின் ஒப்புதலுடன் செயல்பட்டால் மட்டுமே நீண்ட காலத்தில் டேட்டா பணமாக்கும் திட்டம் தொடரும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவர் ரபிசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
RBI Deputy Governor Rabi Sankar says about Consumer Privacy law!
RBI Deputy Governor Rabi Sankar says about Consumer Privacy law! |நுகர்வோர் தனியுரிமையை பாதுகாக்க புதிய சட்டம்.. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தகவல்!