தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மழை , வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைரஸ் காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்பும் கண்டறியப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் காய்ச்சல் வார்டில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 100க்கு மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 300 படுக்கைகள் காய்ச்சல் வார்ட் உள்ளது. இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது குறிப்பிடத்தக்கது.