சென்னை: இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு திட்டமிட்டப்படி இன்று காலை 5 மணிக்கு முதல் ஷோ வெளியானது.
உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இந்த படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மும்பைக்கு சாதாரணமாக ஒரு பரோட்டா கடையில் வேலை பார்க்கச் செல்லும் முத்து எப்படி முத்து பாய் ஆகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன்.
சிம்பு என்ட்ரி
19 வயது இளைஞனாக சிம்புவை சாதாரணமாக ஒரு முள் காட்டில் காட்டும் அந்த முதல் காட்சியில் இருந்தே படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இயல்பான நடிப்பை ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிகர் சிம்பு வெளிப்படுத்தி உள்ளார் என படத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சிம்புவின் டைட்டில் கார்டே செம ஃபயராக தியேட்டரில் போடப்படும் ஸ்க்ரீன்ஷாட்களை ஷேர் செய்து வருகின்றனர்.
மல்லிப்பூ ராப் சாங்
பரோட்டா கடையில் சிம்பு மற்றும் அங்கே இருப்பவர்கள் மல்லிப்பூ பாடலுக்கு ஆடுவதும், அதில் வரும் ராப் சாங்கும் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. முத்துவாக நடிகர் சிம்பு ஒன்றுமே தெரியாத அப்பாவியாக நடிப்பில் அசத்தி உள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சிம்புவின் பெஸ்ட் படம்
நடிகர் சிம்புவின் வாழ்க்கையில் இதுவொரு சிறந்த படம் என்றும் அவரது நடிப்பு அபாரம் என்றும் ரசிகர்கள் வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்து விட்டு பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றனர். சண்டைக் காட்சிகளிலும், ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது என பாராட்டி வருகின்றனர்.
கெளதம் மேனன் காப்பாத்திட்டாரு
மாநாடு படத்திற்கு பிறகு வெளியாகும் சிம்பு படம் எப்படி இருக்கப் போகுதோ என பலரும் அதன் நீளத்தை பார்த்து பயந்த நிலையில், முத்துவின் வாழ்க்கையை ஒவ்வொரு காட்சியாக செதுக்கி இயக்குநர் கெளதம் மேனன் காப்பாத்திட்டாரு என்றும், சிம்புவின் நடிப்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை இந்த படத்துக்கு பெரிய பலமாக மாறியுள்ளது என விமர்சகர் பிரசாந்த் விமர்சித்துள்ளார்.
சிம்பு வெறித்தனம்
சாதாரண பரோட்டா கடை முத்துவாக மும்பையில் வேலை பார்த்து வரும் சிம்பு, இடைவேளையின் போது துப்பாக்கி எடுத்து எதிரிகளை சுட்டு வீழ்த்தும் காட்சி வேறலெவல் வெறித்தனம் என பலரும் சிம்புவின் அந்த டிரான்ஸ்ஃபர்மேஷனை பாராட்டி வருகின்றனர்.
ஜகமே தந்திரம் வாடை வருதே
தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோ தனுஷ் பரோட்டா கடையில் வேலை பார்த்துக் கொண்டே ரவுடிசம் பண்ணும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதே போல வெந்து தணிந்தது காடு படத்திலும் முத்துவாக பரோட்டா கடையில் வேலை பார்க்கும் சிம்பு கேங்ஸ்டராக மாறுகிறார். மேலும், கெளதம் மேனன் சிம்புவை வைத்து இயக்கிய புதுப்பேட்டை படம்டா இது என்றும் தனுஷ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.