ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..!

அமெரிக்கப் பணவீக்க பாதிப்பால் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட மும்பை பங்குச்சந்தை இன்று சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை சாதகமாக அமைந்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது.

இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் நிஃப்டி குறியீடு 50 புள்ளிகள் வரையில் உயர்ந்து 18,050 புள்ளிகளையும், சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 60,676.12 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.

ஆனால் இந்த உயர்வு அடுத்த சில நிமிடத்தில் சரிவை எட்டியது. சரியாக 10 மணிக்குச் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிவில் 60,288.36 புள்ளிகளைத் தொட்டது.

மும்பை பங்குச்சந்தை

வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனத்தில் மாருதி சுசூகி, என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், நெஸ்லே, எஸ்பிஐ, ரிலையன்ஸ் ஆகியவை உயர்வுடன் உள்ளது.

ஐடி பங்குகள்

இதேவேளையில் டெக் மஹிந்திரா, இன்போசிஸ், இன்டஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சரவ், ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயின்ட்ஸ், டாக்டர் ரெட்டி, டிசிஎஸ், விப்ரோ, டைட்டன், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

ஆசிய சந்தை

புதன்கிழமை சரிவுடன் துவங்கிய ஆசிய சந்தை இன்று உயர்வுடன் துவங்கினாலும் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் வெளிப்பாடு இந்திய சந்தையிலும் தெரிகிறது. ஆசிய சந்தை இன்று உயர்வுடன் துவங்க முக்கியக் காரணம் அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று உயர்வுடன் முடிந்ததது தான்.

ஆகஸ்ட் பணவீக்கம்

அமெரிக்காவின் ஆகஸ்ட் மாத பணவீக்க தரவுகள் மூலம் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டியை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் ஆகஸ்ட் மாதம் எரிபொருள் மீதான பணவீக்கம் சரிந்தும் அந்நாட்டின் ரீடைல் பணவீக்கம் அதிகரித்துள்ளது பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் அதிகப்படியான கவலையை ஏற்படுத்தியது.

 

பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டி

இதன் மூலம் இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் வரையில் உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதே மாதத்தின் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ளதால் 0.35 முதல் 0.50 சதவீதம் வரையிலான வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Stock Market Update: sensex opens with 300 pts higher, but fall within 30 mins

Stock Market Update: Sensex opens with 300 pts higher, but falls within 30 mins Asian market is too fragile after usa market ends higher on clueless

Story first published: Thursday, September 15, 2022, 10:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.