பாட்னா : பீஹாரில் நேற்று முன் தினம் மர்ம நபர்கள் இருவர் பொதுமக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்; 11 பேர் காயமடைந்தனர். இதில் கடமை தவறியதாக கூறி ஏழு போலீசார் நேற்று ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பெகுசராய் நகரில் மர்ம நபர்கள் இருவர் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சந்தன்குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்; 11 பேர் பலத்த காயமடைந்தனர்.”இச்சம்பவத்தின் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏழு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மர்ம நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது” என ஏ.டி.ஜி.பி. ஜிதேந்திர சிங் கங்வார் தெரிவித்தார்.
பாட்னா : பீஹாரில் நேற்று முன் தினம் மர்ம நபர்கள் இருவர் பொதுமக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்; 11 பேர் காயமடைந்தனர். இதில் கடமை தவறியதாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்