பெங்களூரு ஆக்கிரமிப்பு.. பட்டியலில் விப்ரோவும்.. இதென்ன புது ட்விஸ்டா இருக்கு?

பெங்களூரு: பெங்களூரில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விப்ரோ, பிரஸ்டீஸ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் கட்டிடங்களை கட்டியுள்ளதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் இந்த நோட்டீஸ் ஆனது கடந்த வாரம் முழுக்க வெள்ளத்தால் நிரம்பி வழிந்த சிலிக்கான் வேலி ஸ்தம்பித்து போன்ற நிலையில் வந்துள்ளது.

இது குறித்து அப்போது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ஆக்கிரமிப்புகளே இதற்கு காரணம். தண்ணீர் செல்லும் பாதைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டன. தண்ணீர் வெளியேற வழி இல்லை. இதனால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டியிருந்தனர்.

டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள்.. விப்ரோ தொடர்ந்து இன்போசிஸ், அச்சத்தில் ஐடி ஊழியர்கள்..!

 மழையால் பெரும் பாதிப்பு

மழையால் பெரும் பாதிப்பு

குறிப்பாக பெங்களூரின் முக்கிய நகரங்களான மகாதேவா, தோடகன்னெல்லி உள்ளிட்ட பகுதிகள் மழையால் பெரும் பாதிப்பினை கண்டன. இங்கு மழை நீர் செல்ல வேறு வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது. நீர் செல்லும் பாதைகள் பெரும் பாலும் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் தான் தற்போது அதனை அகற்றும் பணியில் தான் பெங்களூரு மாநகராட்சியும் இறங்கியுள்ளது.

 ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

கர்நாடகா முதல்வர் தனி நபர்களாக இருந்தாலும் சரி, பெரும் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, சட்டவிரோதமாக ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

 விப்ரோ மட்டுமல்ல
 

விப்ரோ மட்டுமல்ல

விப்ரோ மட்டும் அல்ல, பிரஸ்டீஸ், பெகமானே டெக் பார்க், கொலம்பியா ஆசியா மருத்துவமனை,எகோ-ஸ்பேஸ், கோபாலன், சலார்பூரியா, காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் நலபாட், புர்வா பாரடைஸ், ஆர்பிடி என பல நிறுவனங்களுக்கும் பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தவிர நியூ ஹரிசான் கல்லூரி, ஆதர்ஷா ரீட்ரீட், ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

முதல்கட்டமாக மகாதேவ்புராவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பெங்களூரு மாநகராட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. பெரிய கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிங்களை இடிக்கும் பணியில் முதல்கட்டமாக மாநகராட்சி இறங்கியுள்ளது. இதனையடுத்து பல பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. மாநகராட்சி சார்பில் நில அளவையர் மூலம் நிலங்கள் அளக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கட்டிங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

 விப்ரோ விளக்கம்

விப்ரோ விளக்கம்

இது குறித்து விப்ரோ தோடகன்னெல்லி பகுதியில் அமைந்துள்ள விப்ரோவின் கட்டிடம் அனுமதி வாங்கியே கட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இது மாநகராட்சியின் ஆக்கிரமிப்பு பட்டியலில் (BBMP) விப்ரோவின் பெயரும் இடம்பெற்றுள்ளதையடுத்து, விளக்கமளித்துள்ளது. அதோடு BBMPல் இருந்து தங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: wipro விப்ரோ

English summary

What is Wipro’s reaction to its name in the Bengaluru occupation list?

A notice has been sent on behalf of the corporation that companies including Wipro, Prestige, Eco Space have illegally encroached on buildings in Bangalore.

Story first published: Thursday, September 15, 2022, 13:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.