ஆசியாவின் முதல் பணக்காரரும், உலகின் மூன்றாவது பெரிய பில்லியனருமான கெளதம் அதானி விரைவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள ஜெப் பெசோஸின் நெட்வொர்த்-க்கும், கெளதம் அதானியின் நெட்வொர்த்தும் கிட்டதட்ட நெருக்கமாகவே உள்ளது.
சமீபத்திய காலமாகவே அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக உயர்ந்து வருகின்றது.
அதானி குரூப் கணக்கீட்டில் தவறு.. உண்மையை ஒப்புக்கொண்ட CreditSights..!

அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
இந்த நிலையில் தான் ஏற்கனவே முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முன்னேறினார். இந்த நிலையில் தற்போது நிகர சொத்து மதிப்பில் பெசோஸுக்கும் அதானிக்கும் சிறு வித்தியாசமே உள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின் படி, பெசோஸ் இரண்டாவது இடத்திலும், அதானி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஜெப் பெசோஸ் & கெளதம் அதானி
இதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு 152 பில்லியன் டாலராகவும், இதே அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 145 பில்லியன் டாலராகவும் உள்ளது. தற்போது வெறும் 7 பில்லியன் டாலர்களே வித்தியாசம் உள்ளது.

போர்ப்ஸ் அறிக்கை?
7 பில்லியன் டாலர் என்பது மிகப்பெரிய தொகையாக இருந்தாலும், இந்த வணிக ஜாம்பவான்களுக்கு அது ஒன்றும் பெரிய தொகையாக இருக்காது எனலாம்.
இதே போர்ப்ஸ் அறிக்கையின் படியும் பெசோஸ் 3வது இடத்தில் 151.9 பில்லியன் டாலர் மதிப்புடனும், அதானி 151.9 பில்லியன் டாலருடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

முகேஷ் அம்பானியின் நிலை
இதே முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ப்ளும்பெர்க் அறிக்கையின் படி 92.2 பில்லியன் டாலருடன் 9வது இடத்தில் உள்ளார். இதே போர்ப்ஸ் அறிக்கையின் படி 95.2 பில்லியன் டாலருடன் 8வது இடத்தையும் பிடித்துள்ளார்.
கடந்த மாதம் தான் டாப் 3 இடங்களில் இடம் பிடித்த அதானி, LVMH Moet Hennessy -ன் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட்டையும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸையும் தாண்டி முன்னேறினார். இந்த டாப் 10 பட்டியலில் முகேஷ் அம்பானி, ஜாக்மா இடம் பிடித்தாலும் அவர்கள் முதல் 3 இடங்களுக்குள் வரவில்லை.
Gautam Adani can replace soon jeff bezos as second richest person: check details here
Gautham Adani, the world’s third-largest billionaire, is expected to move up to second place soon.