மோடி கலந்துகொள்ளும் SCO மாநாடு.. SCO அமைப்பில் அப்படி என்ன ஸ்பெஷல்..!

அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் குழுவான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் நடக்கிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா 2017 முதல் உறுப்பினராக உள்ளது. புவியியல் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலகின் மிகப்பெரிய பிராந்திய அமைப்பாகும்.

இந்த அமைப்பு யூரேசியாவின் பரப்பளவில் தோராயமாக 60%, உலக மக்கள் தொகையில் 40% மற்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% க்கும் அதிகமாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.

ரஷ்யா – சீனா இனி அசைக்க முடியாது.. சைபீரியா டூ ஷாங்காய்.. விளாடிமிர் புதின் செம ஹேப்பி..!

 விளாடிமீர் புடின்

விளாடிமீர் புடின்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்ய அதிபர் புடின் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்-க்கு விமானத்தின் மூலம் வந்தார். இதேபோல் பாகிஸ்தான் அதிபர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இன்று காலை புறப்பட்டார். மேலும் ஈரான் மற்றும் சீன அதிபர்கள் இன்று காலையிலேயே உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு வந்தடைந்தனர்

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் மோடி 15 ஆம் தேதி இரவு 9 மணிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்-க்கு செல்ல உள்ளார். மோடி இந்தப் பயணத்தில் ரஷ்ய அதிபரை மட்டும் சந்திக்க உள்ளார், இதேவேளையில் சீனா மற்றும் பாகிஸ்தான் அதிபர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கத் திட்டம் இல்லை.

 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகியவை உறுப்பினராகவும், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய 3 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளது.

 மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தி

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கைக் கணக்கில் கொண்டு உள்ளது இந்த SCO அமைப்பில் இருக்கும் நாடுகள். உலகின் மூன்று முக்கியப் பொருளாதார நாடுகளான சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் எனர்ஜி வளம் நிறைந்த கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகியவையும் இதில்.

 மொத்த வர்த்தக அளவு

மொத்த வர்த்தக அளவு

சீன ஆய்வின்படி, SCO உறுப்பின நாடுகளின் மொத்த வர்த்தக அளவு 2001 இல் $667.09 பில்லியனில் இருந்து 2020 இல் $6.06 டிரில்லியனாக அதிகரித்தது. இதோடு உலகளாவிய வர்த்தகத்தில் SCO உறுப்பினர்களின் ஆதிக்கம் 2001 இல் 5.4 சதவீதத்திலிருந்து 2020 இல் 17.5 சதவீதமாக உயர்ந்தது என மற்றொரு சீன ஆய்வுகள் கூறுகிறது.

 வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு

செப்டம்பர் 2003-ல், SCO உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் 20 வருட “பலதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தில்” கையெழுத்திட்டனர். SCO நாடுகளின் எல்லைக்குள் ஒரு தடையற்ற வர்த்தக மண்டலத்தை உருவாக்க இந்த ஒப்பந்தம் மூலம் சாத்தியப்படுத்த முடியும். ஆனால் இதுவரை இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 3 முக்கிய அமைப்புகள்

3 முக்கிய அமைப்புகள்

எஸ்சிஓ பிசினஸ் கவுன்சில் என்பது பலதரப்பு குழுவிற்குள் வணிகச் சமூகங்களுக்கு இடையே அதிக இணைப்புகளை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனமாகும்.

SCO இன்டர்பேங்க் கூட்டணி SCO உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களால் நிதியுதவி செய்யப்படும் முதலீட்டுத் திட்டங்களுக்கு நிதி மற்றும் வங்கி சேவைகளை வழங்க நிறுவப்பட்டுள்ளது.

மேலும், SCO டெவலப்மென்ட் வங்கி உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Economic Significance Of SCO; PM Modi joining with putin, XI with today meet in Uzbekistan

Economic Significance Of SCO; PM Modi joining with putin, XI with today meet in Uzbekistan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.