Mission Cheetah: நமீபியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரும் 8 சிறுத்தைகள்!

Mission Cheetah: நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவிற்கு வருகின்றன. அவர்களை அழைத்துச் வர சிறப்பு விமானம் நமீபியா சென்றடைந்தது. இந்த விமானம்  சிறப்பான வகையில், அதன் முன் பகுதி புலி வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது பிறந்தநாளில் இந்த சிறுத்தைகளை நாட்டுக்கு அர்பணிப்பார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், அதாவது செப்டம்பர் 17ம் தேதி அன்று, நாட்டில் அழிந்து வரும் , வனவிலங்கான சிறுத்தையின் வருகை  மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வரவுள்ளன. அவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் நமீபியா சென்றடைந்தது. இந்த சிறுத்தைகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவிப்பார்.

புலி ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு விமானம்

இந்த சிறுத்தைகளை ஏற்றிச் செல்வதற்காக நமீபியா சென்றடைந்த சிறப்பு விமானம் அழகிய ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் புலியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமானம் மூலம் நமீபியாவில் இருந்து முதலில் சிறுத்தைகள் ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர், அன்றைய தினம் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்படும். அதனை பிரதமர் மோடி தனது பிறந்தநாளில் நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.

இந்திய தூதரகம் பகிர்ந்து கொண்டுள்ள புகைப்படங்கள்

நமீபியாவில் உள்ள இந்திய தூதர இந்த சிறப்பு விமானத்தின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. ‘புலிகளின் தேசத்திற்கு நல்லெண்ண தூதர்களை அழைத்துச் செல்ல சிறப்பு பறவை தூதுவர் தேசத்திற்கு வந்துள்ளார்’ என பதிவ்விட்டுள்ளது.

70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் சிறுத்தைகள் 

இந்தியாவிற்கு சிறுத்தைகளை கொண்டு வர நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது, இந்த வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் சர்வதேச சிறுத்தை வல்லுநர்கள் கூட்டம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டில், சிறுத்தை மறுசீரமைப்பிற்காக இந்திய வனவிலங்கு நிறுவனம் இந்தியா முழுவதும் 10 சாத்தியமான பகுதிகளை ஆய்வு செய்தது. இந்த சாத்தியமான 10 தளங்களில், குனோ சரணாலயம் (இன்றைய குனோ தேசிய பூங்கா, ஷியோபூர்) மிகவும் பொருத்தமானதாகக் கண்டறியப்பட்டது. சிறுத்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக போதிய ஆய்வுகள் இல்லாததால், 2013-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் சிறுத்தையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு தடை விதித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.