டிஜிட்டல் உலகில் நவீன தேவதைகள் என்றால் அது ஸ்மார்ட் போன்கள்தான். அவசர உதவியில் துவங்கி அறிவை வளர்த்துக்கொள்ள உதவுவது வரை கைக்கு அடக்கமாய் இருக்கும் மினி கடவுள் என்றே அதை அழைக்கலாம்.
அத்தகைய கடவுளை கஷ்டப்படுத்தாமல் பாதுகாப்பாக நாம் பார்த்துக் கொண்டால்தான் அது நமக்கு நீண்ட நாள் உழைப்பை உறுதி படுத்தும். பொதுவாக நாம் என்ன தவறுகள் செய்கிறோம் அதை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
மொபைல் சார்ஜர்
ஒரு சில முன்னணி நிறுவனங்களை தவிர அனைத்து மொபைல் நிறுவனங்களும் மொபைல் பாக்சில் சார்ஜர் தருகின்றனர். அது பழுதாகி விட்டாலோ அல்லது சேதமடைந்து விட்டாலோ உடனே அருகிலுள்ள ரேண்டம் கடைகளில் ஏதோ ஒரு சார்ஜரை வாங்கி பயன்படுத்துகிறோம்.
அது தரமானதா அல்லது சரியாக நமது மொபைலுக்கு பொருந்த கூடியதா என்பதை நாம் யோசிப்பதில்லை. அப்படி செய்யவே கூடாது. உங்கள் மொபைல் எந்த நிறுவனமோ அந்த நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு சார்ஜரை மட்டுமே
வாங்கி பயன்படுத்த வேண்டும்.
போலியான செயலிகள்
பலரும் தங்கள் மொபைலில் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரை பயன்படுத்துவார்கள். ஆனால், அதை விட்டுவிட்டு சிலர் பெயர் தெரியாதோ ஏதேதோ லிங்க் மூலமாக கிடைக்கும் செயலிகளையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவார்கள்.
இதன் விளைவாக மொபைலில் சுலபமாக வைரஸ் அல்லது ஸ்பைவேர்களை பரவ செய்து மொபைலை ஹேக் செய்ய முடியும். அதன் மூலம் உங்கள் அந்தரங்கம் முதல் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரை இனொருவரால் திருடமுடியும். உங்கள் மொபைலையும் பாழாக்க முடியும். எனவே அதிகாரபூர்வ பிளே ஸ்டோர்கள் வழியாக மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.
ஓஎஸ் மற்றும் பாதுகாப்பு அப்டேட்டுகள்:
உங்கள் மொபைல் நிறுவனத்திலிருந்து சில நேரங்களில் புதிய OS அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களுக்கான நினைவூட்டல்கள் வரும். டேட்டா குறைந்து விடும் என்று அவற்றிற்கு டாட்டா காமிக்காமல் முழுமையாக உங்கள் மொபைலை அப்டேட் செய்து வைத்து கொள்ளுங்கள்.
அதே போல் , குறிப்பிட்ட செயலிகளை அப்டேட் செய்ய சொல்லி தகவல்கள் வரும்போது அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அப்டேட் செய்யுங்கள்.
பப்ளிக் WiFi
சில நேரத்தில் பொது இடங்களுக்கு செல்லும்போது அங்கு கிடைக்கும் இலவச பப்ளிக் wifi நெட்வொர்க்குகளை பயன்படுத்துவோம். ஆனால், அதன் மூலம் ஹாக்கர்கள் சுலபமாக உங்கள் மொபைலை ஹேக் செய்து பயன்படுத்தமுடியும். அப்படி தவிர்க்கமுடியாமல் நீங்கள் பப்ளிக் நெட்வொர்க்கை பயன்படுத்த வேண்டுமென்றால் VPN மூலமாக இணையத்தை பயன்படுத்துங்கள்.
மொபைல் கேஸ்கள்
இப்போதெல்லாம் வித விதமான மொபைல் பேக் கவர்கள் வந்து விட்டன. பலரும் அழகுக்காக அதை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அனைவரும் அவசியம் உங்கள் மொபைல்களை தேவையில்லாத சேதாரங்களிலிருந்து பாதுகாப்பதற்கு மொபைல் கேஸ்களை பயன்படுத்த வேண்டும்.
ஓஎஸ் அமைவுகளை மாற்றுவது.
ஜெயில்பிரேக்கிங் செய்து உங்கள் மொபில் OSஇன் அமைவுகளை மாற்ற முயல்வது இறுதியில் பிரச்னையில் முடியலாம். இது உங்கள் சிஸ்டமில் மறைந்துள்ள கூடுதலான அமைவுகளை நீங்கள் பயன்படுத்த உதவினாலும் , இதனால் மொபைலின் பாதுகாப்பிற்க்கே அச்சுறுத்தல் வரலாம். எனவே, அப்படி செய்யும்போது முறையான அனுபவமுள்ள தொழிநுட்ப வல்லுநர்கள் உதவியோடு அல்லது ஆலோசனை பெற்று அதை செய்து கொள்ளுவது நல்லது.