மதுரையில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளிடம் மகிழ்ச்சியாகவும், விழாவில் நெகிழ்ச்சியாகவும் பேசியது கட்சியினரை உற்சாகப்படுத்தியது.
மதுரை நெல்பேட்டையில் காலை உணவு தயாரிக்கும் உணவுக்கூடத்தை பார்வையிட காலை 7.30 மணிக்கு வந்தவர், ஒவ்வொன்றாக கலெக்டரிடம் கேட்டு தெரிந்துகொண்டார். தாயாரித்த சிற்றுண்டியை எடுத்து ருசி பார்த்தார்.
தொடக்க நாளான இன்று கிச்சடியும், ரவா கேசரியும் தயார் செய்யப்பட்டிருந்தது. பின்பு பள்ளியில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உண்டவர் அருகிலிருந்த குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டார்.
இதுபோல் சுவை குறையாமல் தினமும் உணவு வழங்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர், பின்பு விழாவில் சிறப்புரை ஆற்றியவர், நீதிக்கட்சி காலத்திலிருந்து மதிய உணவு திட்டம் எப்படியெல்லாம் விரிவடைந்து சத்துணவு திட்டமாகி, இன்று காலை உணவு வழங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்கிற நூற்றாண்டு வரலாற்றை உணர்வுப்பூர்வமாக பேசினார்.
இந்த திட்டத்தின் கீழ் கிழமை வாரியாக வழங்கப்படும் காலை உணவு வகைகள் பின்வருமாறு:-
திங்கள்
ரவா உப்புமா +காய்கறி சாம்பார்.
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்.
அரிசி உப்புமா + காய்கறி சாம்பார்.
கோதுமை ரவா + காய்கறி சாம்பார்.
செவ்வாய்
ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி.
சோள காய்கறி கிச்சடி.
கோதுமை ரவா காய்கறி கிச்சடி.
புதன்
ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.
வெண் பொங்கல் + காய்கறி சாம்பார்.
வியாழன்
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்.
அரிசி உப்புமா + காய்கறி சாம்பார்.
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
கோதுமை ரவா + காய்கறி சாம்பார்.
வெள்ளி
ரவா காய்கறி கிச்சடி.
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி.
கோதுமை ரவா காய்கறி கிச்சடி.
கூடுதலாக ரவா கேசரி, சேமியா கேசரி