சாதுக்களை தாக்கியகிராமத்தினர் மீது வழக்கு | Dinamalar

சாங்லி, :மஹாராஷ்டிராவில், சாதுக்களை அடித்து நொறுக்கிய கிராமத்தினர் மீது, போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, ஆறு பேரை கைது செய்தனர்.இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறியதாவது:உத்தர பிரதேசத்தில் அகாடா என்ற அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள் நான்கு பேர், மஹா.,வின் சோலாபூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூருக்கு வாகனத்தில் சென்றனர். அப்போது வழி தவறி லவங்கா என்ற கிராமத்திற்கு வந்த அவர்கள், ஒரு சிறுவனிடம் வழி கேட்டுள்ளனர். அச்சிறுவனுக்கு அவர்கள் பேசியது புரியவில்லை.

அதோடு, அவர்களது தோற்றத்தை பார்த்து பயந்த சிறுவன் திருடன் என அலறியுள்ளான். இதைக் கேட்டு ஓடிவந்த கிராமத்தினர், சாதுக்களை குழந்தை கடத்துபவர்கள் என தவறாக கருதி கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளனர். இது குறித்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவியது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாதுக்களை மீட்டு அனுப்பி வைத்தனர். அவர்கள் தங்களை தாக்கிய கிராமத்தினர் குறித்து புகார் அளிக்கவில்லை. இருந்தும், போலீசார் ௨௦ பேர் மீது வழக்குப் பதிந்து, ஆறு பேரை நேற்று கைது செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.