நிலக்கோட்டை: தொடர் மழை மற்றும் இதமான காலநிலையால் கொடைரோடு சிறுமலை அடிவாரப் பகுதியில் நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிலக்கோட்டை அதனை சுற்றியுள்ள சிறுமலை அடிவாரப் பகுதிகளான பள்ளப்பட்டி, சடையாண்டிபுரம், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம், ஊத்துப்பட்டி, ஜம்புத்தூரக்கோட்டை ஆகிய பகுதிகளில் சமீப காலமாக நெல்லிக்காய் விளைச்சல் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக பருவமழை முதல் சரியான நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தொடர்ந்து இதமான காலநிலை நிலவுவதாலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு வரும் நெல்லிக்காய் விளைச்சல் வழக்கத்தை விட கூடுதலாக கொத்து கொத்தாக விளைந்து காய்கள் பெருந்து அதிக எடையுடன் அதிக லாபத்திற்கு விற்பனையாவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.